இத்தனைக்கும்,1996, 1997, 1998, 1999 களில் இந்திய பிரதமர்களை தேர்வை முன் எடுத்து ஆதரித்தவர் நாயுடு. எட்டு மாதங்கள் முன்பு பிரதமர் மோடியைசந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை… ஆனால் இன்று…..
———————————————————-
எட்டு மாதங்கள் முன் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் சந்திரபாவு நாயுடு!!
அவரை சந்தித்து தன் ஆதரவை தெரிவிப்பதுதான் திட்டம்!!
கடைசி வரை பிரதமரை சந்திக்க
வாய்ப்பு கிடைக்கவில்லை!
ஏமாற்றுத்துடன் திரும்பினார். இத்தனைக்கும்,1996, 1997, 1998, 1999 களில் இந்திய பிரதமர்களை தேர்வை முன் எடுத்து ஆதரித்தவர் நாயுடு.
73 வயது!அரசியல் பின்னடைவுகள் தோல்வி அதனால் கிடைத்த அவமானங்கள்,புறக்கணிப்புகள்!
கடைசி நேரத்தில் கூட சிறை!
இன்று முதல்வர்!ஒரு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகும் அளவுக்கு முக்கியமானவர்.
தற்போது இவரின் வருகைக்காக டெல்லி பிரதமர் அலுவலகம் காத்துக்கொண்டு இருக்கிறது.
எந்த பிரதமர் சந்திக்காமல் தவறவிட்டாரோ இன்று காலையில் அவர் வலிய போனில் பேசுகிறார்.கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் வலிய பேசுகிறார்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் பேசுகிறார்.
காலம் எப்போதும் ஒருவருக்கானதல்ல!
எல்லோருக்குமானது!
அதனால் நீங்களும் எப்போதும் மனம் தளராதீர்கள்!
உங்கள் கடமையை சரிவர செய்யுங்கள்.
வரவேண்டியது தானே வரும்...
No comments:
Post a Comment