Monday, June 17, 2024

#அரசியல்சாசனம்- #காங்கிரஸ் #திமுக #அரசியல்சாசனதிருத்தம் #பிரிவு356 #Article356 #Constitutionalamendments #Congress #dmk

#அரசியல்சாசனம்- #காங்கிரஸ் #திமுக

#அரசியல்சாசனதிருத்தம்
#பிரிவு356 #Article356
#Constitutionalamendments 
#Congress #dmk
———————————————————
அரசியல் சாசனத்தைத் தூக்கி காட்டும் ராகுல் காந்தியும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதே அறை கூவல் விடுகிற முதல்வர் மு க ஸ்டாலின் இருவரின் செயலையும் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

42வது சட்ட திருத்தத்தை அவசர நிலை காலத்தில்  கொண்டு வந்து நீதிமன்றங்களின் உரிமைகளை மதிப்பிழக்கச் செய்து 
அரசியல் சாசனத்தை முற்றிலும் காலி பண்ணியது ராகுல் காந்தியின்  பாட்டியாகிய இந்திரா காந்தி அம்மையார்.  இதுவரை மொத்த அரசியல் சாசனத் சட்ட திருத்த105/ 2021.



காங்கிரஸ் பிரிவு 356 கொண்டு மாநில அரசுகளை 90 முறை (மொத்தம் 115) மாநில அரசுகளை கலைத்தது.  அரசியல்சாசன திருத்தமும் சுமார் 90 முறை ஆகும். மொத்த 

அப்போது காங்கிரஸின் கூட்டணி கட்சியாக இருந்த அபிலாஷ் யாதவின் அப்பா முலையம் சிங் யாதவ்,லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்கள் எல்லாம் கூப்பாடு போட்டுக்  லோக் நாயக் ஜே பி தலைமையில் கொந்தளித்தார்கள்.

1988 ல்   இங்கே தமிழ்நாட்டில் கலைஞர் அன்பழகன் உட்பட பலரும் இதே அரசியல் சாசனத்தைத் தீ வைத்து எரித்தார்கள்.அதன் காரணமாகச் சிறைக்குச் சென்றார்கள்.அப்போதைய பேரவைத் தலைவர் பி ஹெச் பாண்டியன் அவர்களால் அச்சம்பவத்தில் ஈடுபட்ட எம்எல் ஏ க்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்கிற வரலாற்றை எல்லாம் இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள் போல இருக்கிறது.

அகில இந்தியாவிலேயே.. தி.மு.க ச‌ட்டம‌ன்ற உறுப்பினர்கள் தான். சட்ட நகலை எரித்ததற்கு பதவியிழந்தவர்கள்... இவர்கள்.. இன்று பேசுவது நகைப்பை தருகிறது

1. Thiru K. Anbazhagan - 17th November, 1986
2. S.Balan - 17th November, 1986.
3. A. Selvarasan - 17th November, 1986
4. P. Ponnurangam - 17th November, 1986 .
5. Parithi Elemvazhuthi - 17th November, 1986.
6. M. Ramanathan - 19th November, 1986
7. R. Chinnasamy - 23rd November 1986
8. M. Abragam - 29th November, 1986
9. C. Arumugam - 29th November, 1986
10. V.K. Raju - 5th December, 1986 and others 

On the above mentioned dates the members of the assembly mentioned above burnt the constitution in public and were therefore disqualified by the then Tamilnadu Assembly Speaker 
P. H. Pandian

இப்பிடி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அரசியல் சாசனம் தேவ நாகரி எழுத்தில் இருக்கிறது என்பதாக 
 காரணங்களை மாற்றிக் கூறினார்கள்.!
அரசியல் சாசனத்தை எந்த காரணத்தையும் முன்னிட்டு மதிக்காத இவர்கள் இன்றைக்கு வந்து அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்று கூச்சல்ப் போடுவதும் கையடக்கப் சாசனப் பிரதிகளைத் தூக்கிக் காட்டுவதும் எந்த வகையில் நியாயம்!

தனக்கு வந்தால் இரத்தம்!.அடுத்தவருக்கு வந்தால் தக்காளிச்சட்னியா?!

#அரசியல்சாசனம்- #காங்கிரஸ் #திமுக
#அரசியல்சாசனதிருத்தம்
#பிரிவு356 #Article356
#Constitutionalamendments 
#Congress #dmk



#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
17-6-2024


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...