Thursday, June 6, 2024

#*வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது*. *இலக்கியம் எல்லாவற்றையும் மறு பரிசீலனைச் செய்யச் சொல்கிறது*

#*வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது*. 
*இலக்கியம் எல்லாவற்றையும் மறு பரிசீலனைச் செய்யச் சொல்கிறது* 
————————————
இந்த ஐந்து நாட்களாக முழுக்க; தேர்தல் முடிவு நேரத்தில்,இலக்கியம் பக்கம் திரும்பி இருக்கிறேன். எனக்கு நல்லது பொல்லது சொல்லும் ஆலோசகராக இருந்த  உண்மையான காங்கிரஸ்காரர்
நா.பார்த்தசாரதியின் “
#குறிஞ்சி_மலரை” பலமுறை நான் ஏற்கனவே வாசித்து இருந்தாலும் இன்று மன அமைதிக்காக ஒரு முறை வாசித்தேன். 

கி ராஜ நாராயணனின் கரிசல் மண் கதை “#கோபல்லபுரத்தை” பத்து முறைக்கு மேல் படித்து இருக்கிறேன். இனியும் ஒரு முறை படிக்கத்தான் வேணடும் என வாசித்தேன்.  

அதேபோலவே #ஜானகிராமனின் #மோகமுள்ளை அன்று படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த ஒரு வாரத்தில் மீண்டும் ஒரு முறை அதை எடுத்து வாசித்தேன். 




 பல நாட்கள் கழித்து, உண்மையில் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு முறை அகிலனின் ‘ வேங்கையின் மைந்தன் ‘ வரலாற்று புதினத்தைப்படித்து முடித்தேன்.  

இளம் வயதில் ஆதர்ஸ எழுத்தாளர்களாக இருந்த  எழுத்தாளர்கள் #கல்கி,#சாண்டில்யன்
 #நா_பார்த்தசாரதி, #அகிலன், #கிரா,#ஜெகச்சிற்பியன், #ஜெயகாந்தன்,  பலரின் என் தமிழார்வத்தை வளப்படுத்தினார்கள் என்று சொல்ல வேண்டும். கூடவே இவர்கள் எழுத்தாற்றலில் தொடர்ந்து வந்த நேர்மையும் உண்மையும்  சத்தியமும் கண்ணியமும் நம் மனதுக்குள்ளும் வளர பெரிய காரணிகளாகவும் இருந்தார்கள் என்பதும் உண்மை! கல்கிக்கு மணியம், அகிலனுக்கு வினு, நா.பார்த்தசாரதிக்கு விஜயா, வினு என்று வரையப்பட்டிருந்த ஓவியங்கள் அந்த வயதில் பிரமிப்பை ஏற்படுத்தி ஏகலைவனாக என்னையும் படைப்பு இலக்கிய மீது என் தந்தை, தாய், சகோதரர்களும் காரணம்.

Then, The Happy Prince and Other Tales is a collection of stories by 
#OscarWilde…

என்றும் என் மீது காட்டும் மாலன் நாராயணன் திரு மாலன் எழுதிய “தோழி” , அவர் அனுப்பிய புத்தகம் கிடைக்கப்பெற்று ஏற்கனவே வாசித்ததுதான் என்றாலும் அதை இன்று இரவு மறுவாசிப்பிற்கு எடுத்து வைத்திருக்கிறேன்.

எவ்வளவு கால் பட்டுக் கசங்கினாலும் தினம் தினம் புற்கள், பூக்கள் முளைக்கவும், மலரவும் செய்கின்றன. நம்பிக்கை தானே வாழ்க்கை…..

இன்றைய மெய் பொருள் அற்ற மிருக அரசியல்ல அப்பாடா நிம்மதின்னு உட்கார்ந்தா (சவம்) சமாதி தான். காலை ஆட்டி கொண்டு தூங்கனும்..

 வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இலக்கியம் எல்லாவற்றையும் மறு பரிசீலனைச் செய்யச் சொல்கிறது. மிக அமைதியான இந்தப் புதினங்களில் வரும்  மிகச்சிறந்த தமிழின் லட்சியமான கதாபாத்திரங்களை ப் படித்து இந்த  வாரத்தில் எனது மனதை இனிமையாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். கடந்த காலங்கள் எவ்வாறு இன்பமும் துன்பமுமாய்க் கலந்து இருந்தன என்பதற்கும் இந்த விதமான கதைகளில் நமக்கு ஒரு செவ்வியல் பண்பையையும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும் பெற்றுக் கொள்கிறோம் என்ற வகையில்
இவைகள் ஒரு பண்பாட்டு அர்த்தத்தில் வரலாறு ஆகவும் இருக்கின்றன. புதினங்கள் வாசிப்பது ஒரு இனிமை. அந்த எழுத்தாளர்களுக்கு எல்லாம் எனது மதிப்பு மிக்க வணக்கங்கள் !

#புதினங்கள்
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
6-6-2024.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...