Wednesday, June 26, 2024

பொதுவாகவே அரசியலில் எந்த நடைமுறையும் அற்ற கருத்துக்கள் பலவறாக மாறி வரலாம். மனம் போன போக்கில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதாகத்தான் இன்றைய நிலை இருக்கிறது*.

*பொதுவாகவே  அரசியலில் எந்த நடைமுறையும் அற்ற கருத்துக்கள் பலவறாக மாறி வரலாம். மனம் போன போக்கில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதாகத்தான் இன்றைய நிலை இருக்கிறது*.

இன்று திமுக 40/ 40 வெற்றிதான். திமுக வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 1967 முதல் திமுக கூட்டணி மூலம் தேர்தலை சந்தித்து இல்லை. திமுக தனியாக நின்றத்தும் இல்லை. இந்த வெற்றி நாளை தோல்வியாக மாறலாம். திமுகவும அதை சந்தித்தும் உள்ளது. இன்றைய தீண்டப்படாத கட்சி  என திமுக சொல்லும் பாஜகயுடனும் கூட்டணி வைத்துள்ளது.










1972 தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெறும் என்று பலரும் ஆருடம் சொன்னார்கள்.
ஆனால் அன்று தேர்தல் களம் கண்ட
 திமுக வானது அண்ணாவின் காலத்தை விட அதிகத் தொகுதிகளைப் பெற்று வெற்றியடைந்தது. அது வேறு விஷயம். 

நான் இப்போது உள்ள அரசியல் நிலைமைக்கு வருகிறேன். இதற்கிடையில் எவ்வளவோ அரசியல் விஷயங்களைச் சொல்லலாம். அதற்கு இடமில்லை!

ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி கட்சியைக் கைப்பற்றி விட்டார் அதன் மூலம் வெற்றி அடைந்து விட்டார் என்று பேசினார்கள். இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு அவரது கதையே முடிந்து விட்டது என்கிறார்கள்.

அதேபோல் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்று நடைபயணம் எல்லாம் மேற்கொண்ட போது அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவை மலர வைத்து விடுவார் என்றெல்லாம் நம்பிக்கையாகப் பேசினார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அப்படி சொன்னவர்கள் எல்லாம் அவருக்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள். இப்படித்தான் அரசியல் நோக்கர்கள் ஊடகங்கள் எதிர்வினையாளர்கள் அரசியல் அறிந்தவராக சொல்லிக்கொண்ட எல்லோரும் உலவுகிறார்கள். அல்லது தான் மட்டும் தான் அறிவாளி என்பது போல நடந்து கொள்கிறார்கள். 70% மக்கள் தங்கள் வாய்க்கு வந்ததை பேசுவது தான் தேர்தல் நேரங்களில் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இந்திய அரசியல் சாசனத்தின் வெளியீடுகளை எல்லாரும் கையில் பிடித்துக் கொண்டு தூக்கிக் காட்டுகிறார்கள்.
இந்திய அரசியல் சாசனத்தைக் கேலிக் கூத்தாக்கியவர் இந்திரா காந்தி அவர்கள் தான். அதெல்லாம் வசதியாக மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. அப்போது அகிலேஷ் யாதவின் தந்தை இப்போது இருக்கும் லல்லுப் பிரசாத் யாதவ் காஷ்மீர் பாரூக் அப்துல்லாஹ் தமிழ்நாட்டில் தி.மு.க எல்லோரும் இந்திரா காந்திக்கு எதிர்வினையாற்றி அப்போது ஆற்றினார்கள். திமுக அரசியல் சட்ட சாசனத்தையே எரித்தார்கள்.

இந்த கும்பல்கள்தான் இப்போது அரசியல் சாசனத்தை நாடாளுமன்றத்தில் தூக்கிக் காட்டுகின்றன. இதுதான் கருத்துக்களின் கோளாறுகள் என்கிறேன். நடைமுறைக்கு ஆகாத சந்தர்ப்பவாதங்கள் அந்தந்த நேரத்தில் நியாயங்கள் என மோசமான நிலையில் அரசியல் ஆனது கும்பல் மனப்பான்மையை எட்டிக் கொண்டிருக்கிறது.

 அரசியல் சரித்தன்மை என்பதே இல்லை!காலத்துக்கு ஏற்ற கோலங்கள் கோலத்திற்கு ஏற்ற வேசங்கள் வேறு என்ன சொல்வது?

Tailpiece 

நேற்று நாடாளுமன்றத்தில் உறுதிப்பாடு எடுத்த தமிழ்நாட்டு எம்பிக்கள் உதயநிதி ஸ்டாலினை 
 எ வ வேலுவை எக்ஸட்ரா எக்ஸட்ரா எனப் பலரையும் முன்னடையாக விளித்து விளித்து உறுதிமொழி எடுத்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

நல்லவேளை இவர்களில் அமைச்சர் மெய் நாதன் குறிப்பிட்வாறு முதல்வர் துணைவியார் துர்காஸ்டாலினை விளித்து உறுதிப்பாடு எடுக்காமல் இருந்தார்களே அதுவரைக்கும்  நல்லதென்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ConstitutionofIndia
#emergency

26-6-2024.


No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...