#நெருக்கடிநிலை எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போது நான்
ஸதாபன காங்கிரஸ். காமராஜர் மறைவுக்கு பின் இரு காங்கிரஸ் இணைப்பு தமிழகத்தில் நடந்தது.
இந்திய மக்களாட்சி வரலாற்றில் அது ஓர் இருண்ட காலம் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. 1975 ஜூன் 25 ஆம் தேதி பிறக்கும் முன்பே டெல்லியில் உள்ள பல பத்திரிகை மற்றும் செய்தி நிறுவங்கங்களுக்கு மின்சாரத்தடை ஏற்படுத்தப்பட்டது .அதனால் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலைப் பிரகடனம் அடுத்த நாள் பத்திரிகைகளில் வரவில்லை. பத்திரிகைகளே வரவில்லையே . அரசுக்குப் புகழாரம் சூட்டும் சில பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்தன. மக்களவை உறுப்பினர்களே காலையில் அவையில் வைத்துதான் எமெர்ஜென்சி பற்றி அறிந்துகொண்டனர் என்பதுதான் வியப்பு.
இரவே எதிர்க்கட்சியின் பல தலைவர்களை வீடுத்தேடிச் சென்று கைது செய்து சிறையில் அடைத்தனர். யாரெல்லாம் கைது செய்யப்பட வேண்டியவர்கள் எனச் சில நாள்களுக்கு முன்பே பட்டியலிட்டது இந்திரா அரசு. அரசின் கைகளில் அகப்படாமல் சிலர் தப்பித்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் . எல் கே அத்வானி, ஜனசங்கதலைவர் நானாஜி தேஷ்முக் சுப்பிரமணிய சாமி போன்றோர் .அடுத்த நாள் மக்களின் குடியுரிமையைக் குடியரசு தலைவர் ரத்துச் செய்தார் ..அதற்காக நீதி மன்றங்களிலும் போக முடியாத நிலைமையும் உருவானது.
குஜராத்தில் மாணவர்கள் நடத்திய நவ நிர்மாணப் புரட்சி , பீகாரில் ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த போராட்டம் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் தலைமையில் நடந்த ரெயில்வே போராட்டம் , இப்படியான நெருக்கடிகளால் இந்திரா அரசு திணறிக்கொண்டிருக்கும்போது தான் ரேபரேலியில் இந்திராவின் வெற்றி அலஹாபாத் உயர் நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்படுகிறது.
ராஜினாமா செய்வதற்குப் பதிலாக எமெர்ஜென்சி பிரகடனப்படுத்தப்படுத்தினார் இந்திரா என்கிற சர்வாதிகாரி . ஜனநாயகம் மூச்சற்றுப் போனது . பல மாநில அரசுகள் வீழ்த்தப்பட்டன . நாடெங்கும் இளைஞர்களால் மாணவர்களால் எதிர்க்கட்சித்தலைவர்களால் நிரம்பி வழிந்தன சிறைகள் . சிறைகள் போதாமல் பல கேம்ப்கள் சிறைகளாக்கப்பட்டுச் சித்திரவதைக்கூடங்களாக்கப்பட்டன. கேரளாவின் ராஜன் வழக்கு இன்றும் புதிராகஇருக்கும் ஒன்று . ராஜன் என்ற பொறியியல் கல்லூரி மாணவரை அழைத்துச் சென்றது கேரளா போலீஸ் . அவ்வளவுதான் . பிறகு அவரை என்ன செய்தார்கள் என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது. தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தியின் தவறான ஆலோசனைகள்தான் எமெர்ஜென்சி நிலைக்குக் காரணம் என்று கூறப்பட்டன . நாடெங்கும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. கொலைகள் கதறல்கள் கலவரங்கள் எங்கும்.. ஜனநாயகத்தின் பேரிரைச்சலை நிறுத்திவிட்டேன் என்றார் இந்திரா காந்தி ..
காங்கிரஸ் அல்லாத ஓர் அரசுக்கு வழிவகுத்தது இந்த நெருக்கடி நிலைதான்.. பலவித எதிர் கருத்துக்களும் அக்காலத்தில் வளர்ந்து வந்தன. இன்று ஜனநாயகத்தை முடக்கிய அந்தக் கரிநாள் நடந்து 49 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. இன்றும் வலியின் வேதனையின் அடையாளங்களைச் சுமந்து வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு நன்றியும் அன்பும் .. அன்று ஜனநாயகத்திற்காக, குடியுரிமைகளுக்காகக் குரல்கொடுத்து உயிரைக்கொடுத்த ஆயிரக்கணக்கானோருக்கு வணக்கங்கள்
ஆனால் சஞ்சய் காந்தியும் இஸ்லாமியர் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று சொன்னார் என்பதையும் அதையே மோதியும் சொல்கிறார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சஞ்சய் காந்தி கட்டாயக் கருத்தடையில் இறங்கினார்.
#Emergency1975
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
26-6-2024.
No comments:
Post a Comment