Saturday, June 1, 2024

ParliamentaryElection2024-நாடாளுமன்றதேர்தல்2024

#*எக்ஸிட்போலை நெருங்க நெருங்கவே*……  *கருத்துக்கணிப்புகள்*

இன்று மாலையில் இருந்து நாளை வரை நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் விவாதங்கள் நடைபெற இருக்கின்றன.
 அது சம்பந்தமாகத் தொலைபேசியில் பேச வேண்டும் என்று எனக்கு அழைப்புகள் வந்தன. டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில மற்றும் தமிழ் தொலைக்காட்சிகள் இந்த அழைப்பை எனக்கு விடுத்தன. 

இக் கருத்துக் கணிப்பில் சொல்ல என்ன இருக்கிறது? எல்லாம் தெரிந்தது தான். தமிழகத்தை பொறுத்தவரையில்35 -36 /40 இல் சீட்டுகளை திமுக பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வடக்கில் பாஜக சார்பில் மோடி தான் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமர் பதவிக்கு வரப் போகிறார்! இதற்கு எதற்கு அரசியல் கருத்துக் கணிப்புகள் என்று சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டும்.
சரியான எதிர்க்கட்சிகளும் இல்லை! பிறகும் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குழப்பங்களால் எளிதாக திமுக 36  வரை இடங்களில வெற்றி வாய்ப்பை பெறும் என்று தான் தோன்றுகிறது. இன்றைய நிலையில் திமுகவுக்கு எதிர் வினை ஆற்றுவன்….

போக இங்குள்ள திமுக வேட்பாளர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்தியாக் கூட்டணி ஜெயித்து வந்தால் யார் யாருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க முதல்வர் ஸ்டாலின் இந்திய கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு கூட போகவில்லை. ஏன் போகவில்லை? மத்தியில் மோடி ஜெயித்து விடுவார் என்பது அவருக்கே உறுதியாகத் தெரியும்!  திமுக 36 வரை ஜெயித்து விடும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு மந்திரி பதவி க்காகக் கனவு கண்டு கொண்டிருப்பவர்களுக்குச் சொல்வது என்னவெனில்   
இவர்களது மந்திரிக் கனவு பலிக்க போவதில்லை.

நாட்டை நல்லபடியா ஆளனும், உயிர கொடுத்து போட்ட ஒவ்வொரு திட்டத்தையும் தொடரனும், முடிக்கனும். நாட்டை வல்லரசா முன்னேத்தனும்னு ராப்பகலா நினைக்கறவங்களுக்குதானே டென்ஷன் ?
#ParliamentaryElection2024 



#நாடாளுமன்றதேர்தல்2024. 

#ksrpost 
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
1-6-2024

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...