நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பதவிக்கு போட்டிகள் இருப்பதாகத் தெரிகிறது. நாட்டு விடுதலைக்கு முன் 1926 முதல் 1947 வரை இம்மாதிரி மக்களவை தலைவர் பதவிக்கு போட்டிகள் இருந்தன.
நாடு விடுதலை பெற்ற பின் பெரும்பாலும் மக்களவைத் தலைவர் பதவிக்கு போட்டிகள் இருந்ததில்லை! ஒருமித்த கருத்தால் தேர்வு இருந்தது.ஆனால் இம்முறை மக்களவை தலைவர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள்.
கடந்த மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை! மக்களவை துணைத் தலைவர் பதவிக்கும் கூட ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த முறை மக்களவைத் தலைவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டியதுதான்..
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
19-6-2024.
No comments:
Post a Comment