#என்னைய மாதிரி படிக்காதவன் ஒருத்தன் தண்டவாளத்தில் தலையை வச்சதனாலாதான் உன்னைய மாதிரி ஒருத்தன் படிச்சுட்டு வந்து உட்கார்ந்திருக்கான்.....#விடுதலை 2 திரைப்பட வசனம்.
______________________________
#சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிய கருணாநிதி
______________________________
#கல்லக்குடி ரயில்வே ஸ்டேஷனில் போஸ்டர் ஒட்டுவதுதான் கட்சியின் தீர்மானம். ஆனால் கருணாநிதி அதோடு நின்றுவிடத் தயாராக இல்லை. தான் கைது செய்யப்படுவதற்கு வேறு என்ன வழி என்று பார்த்தார்.
இரயில் வந்து நின்றது.
உடனடியாகத் தன்னோடு வந்தவர்களில் நாலு பேரை அழைத்துக் கொண்டு தண்டவாளத்தில் படுத்துவிட்டார்.
போலீசார் திகைத்தனர். கட்சியின் தீர்மானத்தை அவர்களும் அறிந்தார்களாகையால் இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முத்து வெங்கட்டராமன் என்பவர் படுத்திருந்தவர்கள் அருகிலே சென்று "உங்கள் தீர்மானத்தில் இந்தச் செயல் இல்லையே? எழுந்து சென்றுவிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
கருணாநிதி மறுத்துவிட்டார்.
பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
#கூட வந்த நாலு பேரில் யாராவது முதல்வராக முடிந்ததா?
அந்த நாலு பேர் யார் என்று இதுவரைக்கும் யாருக்காவது தெரியுமா?
#ஆனால் கருணாநிதி எவ்வளவு அழகாக "கல்லக்குடி கொண்ட கருணாநிதி"ன்னு பெயரை தட்டிக் கொண்டுவிட்டார்.

No comments:
Post a Comment