Tuesday, January 21, 2025

உடம்பும் கூடலுமே வாழ்க்கையல்ல. அது வாழ்வின் ஒரு பகுதி

 உடம்பும் கூடலுமே வாழ்க்கையல்ல. அது வாழ்வின் ஒரு பகுதி



உடலால் பெண்ணைத் திருப்தி செய்வது இயலாத காரியம் எத்தனை வீரமான ஆணுக்கும் இது இயற்கை விதித்த விதி.
கூடலில் சூரம் காட்ட பெண் வசப்படுவாள் என்பதும் பொய்.
காதலுக்கு அடிப்படை காம சாஸ்திரமல்ல. பெண் ஆதரவு தேடும் பிராணி, தோழமை விரும்பும் பிரகிருதி, தோழமை காட்டும் ஓர் இடமாக
கூடலுக்குப் பிறகே பெண்ணுக்கு ஆணின் அண்மையும் அன்பும் அதிகம் தேவைப்படுகின்றன.
ஓவர்டைம் செய்தது முதுகு வலிக்குது சரசு, கொஞ்சம் நெருங்கினாப்பலபடுத்துக்கியேன்."
அவள் முதுகு தடவிவிடுவது நூறு கூடலுக்குச் சமம்
காமம் உணவல்ல. அப்பம் வடைதயிர் சாதம் அல்ல.
அது ஒரு நட்பு பரிமாறல். அன்பு செய்தலின் ஒருவகை. அறிதவின் ஒரு பக்கம்.
காதல் வளர காமம் சிறக்கும் காமம் மட்டுமே காதலாகாது
காமத்துக்கு வயசு இல்லை. இருபது வயதில் இறுக்கி தழுவிக்கொள்ளும் காமம் முப்பதில் கால் போட்டு தூங்கும்.
நாற்பதில் அண்மைபோதும். ஐம்பதில் பார்வை போதும். அறுபதில் உயிரோடு இருப்பதே போதும்.
-#பாலகுமாரன்..
மேய்ச்சல் மைதானம்
•••
எவ்வளவு சிரமங்கள், கஷ்டங்கள், தொடர்ந்து விழும் சரிவுகள், எடுத்த முயற்சி எல்லாம் தோற்று..
அட.. திருமண வாழ்க்கையாவது நிம்மதியா ஓடுதா, அதிலும் வாழ்க்கைத் துணையால் ஏற்படும் பிரச்சனைகள், கொஞ்சம் கூட யோசிக்க விடாமல் அடுத்தடுத்து..
வரும் டார்ச்சர்..
இதில் ஆண் பெண் என்றில்லை... ஒரு சில விடுகளில் இருபுறமும் சில நிறை குறைகள்..
திருமணமாகி புகுந்த வீட்டில் வரும் எவ்வளவோ பிரச்சனைகள்.. ஒவ்வொரு விளக்கம் பின்னும் ஒரு கேள்வி.. பிறந்த வீட்டிலாவது அடலீஸ்ட் ஷேர் செய்து கொள்ள முடியும்.. புகுந்த வீட்டில்.
ஒவ்வொரு நாளும் சொந்த தொழில், ஏதோ ஒரு நிறுவனம் நடத்தி அதில் தொடரும் பிரச்சனைகள்.. பொருளாதாரம் பிரச்சனை ஓரளவுக்கு சரி செய்து கொள்ள முடியும்.
அவற்றை தாண்டி நிறைய பிரச்சனைகள் உள்ளது.
ஆனாலும் சமாளிக்கிறார்கள்.. வாழ்கிறார்கள்..
அடிப்படை மகிழ்ச்சி, சந்தோசம், ஆரோக்கியம்.. பின் பிழைப்பு,வளர்ச்சி..
ஒரு இலக்கை நோக்கி பயணித்தல்..
கடந்த சில மாதங்களில் ஒரு சில தொழில் செய்பவர்களை.. சில நிறுவனங்களில் பொறுப்பில் உள்ளவர்கள், சிறு தொழில் செய்யும் பெண்கள்..
அன்றாடம் வருமானம் நம்பியே வாழ்பவர்கள் அவர்களை நம்பியே தொழில்.. தொழிலின் வருமானம் நம்பியே குடும்பம்..
ஆனாலும் எல்லாம் கடந்து தினம் தினம் கடக்கிறார்கள்...
இவர்களிடம் நான் பார்த்த ஒற்றுமை..
ஏதாவது ஒன்றில் பிஸியா வைத்துக் கொள்ளல்..
தன் பொறுப்பை புரிந்து மேலும் அதை நோக்கியே செல்லுதல்..
நம்முடன் இருப்பவர்கள் நலன் கருதி சந்தோசமா காண்பித்து புன்னகையுடன் மேலும் கடமையை செய்தல்...
மகிழ்ச்சியா இருக்கும் நாளை ஏற்று கொள்ளுங்கள்..
நம்மை சுற்றி இருக்கும் சூழல் மாறினால் தான் நான் சிரிப்பேன். மகிழ்ச்சியா இருப்பேன் என்று... சந்தோசத்தை ஒதுக்காதீர்கள்...
அது வேறு வகையில் உடம்பை படுத்தும்...
பிரச்சனைகள் ஒரு புறம் வைத்து.. முடிந்தவரை பிஸியா வைத்துக் கொள்வோமே.
பிரச்சனைகளை மறக்க அல்ல..
நம் பொறுப்பை உணர...
ஒவ்வொரு நாளும்..
@ Srinivasan
Kumari Sowmya Sri Raman

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்