இன்றைய சூழலில் பலருக்கு
#முதலைக்கண்ணீர் வடிப்பதே வழக்கமாகிவிட்டது!
முதலை இரையை உண்ணும் போது கண்ணீர் வடிக்குமாம்! அது பாதிக்கப்பட்ட இரைக்காக அழுவது போல அல்லது பாசாங்கு செய்வது போல நமக்குத் தெரியும்! அதை நம்புவதற்கு பலரும் உள்ளார்கள்
ஆனால் முதலைக் கண்ணீர் என்பது மேலோட்டமான அனுதாபத்தைப் பாவனை செய்து கொண்டு தன் இரையை விழுங்குவதில் காரியமாய் இருக்கும் என்பதே அதற்கான உவமானம். இது 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் தோன்றி வழக்காகி வந்தது என்று கூறுகிறார்கள்!
இன்றைய சூழலில் இது பலரையும் குறிக்கிறது! அவ்வளவுதான்! யார் யார் என்றெல்லாம் சொல்ல முடியாது! அவரவர்கள் அனுமானித்துக் கொள்ள வேண்டியதுதான்! இது சிலரின் அற்ப குறியீடுகள்.
#முதலைக்கண்ணீர்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-1-2025.
No comments:
Post a Comment