Tuesday, January 21, 2025

பிரான்ஸ் நாட்டில் வேலைக்கி செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் படையில் இணைப்பு!

 பிரான்ஸ் நாட்டில் வேலைக்கி செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் படையில் இணைப்பு!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவேளை கட்டாயமாக ரஷ்ய இணைக்கப்பட்டுள்ளார்.
அந்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்றமுகவர்தெரிவித்துள்ளார்.
பின்,அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கி 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரைனின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்