பசப்பல் ராஜகோபால்
வேர்க்கும் ஜமுக்காளம்
அடிப்பதும் அணைப்பதும்
முடிப்பதும் தொடுப்பதும்
நடிப்புனக் கென்றால்,
ஜமுக்காளமா நான்?
மேடை சமைத்த நாள்
என்னைக் கேட்டாயா?
நான் இல்லையென்றால்
மேடை யாருக்கு
மேடைக்கு நானா?
"என்னிஷ்டம்" என்றால்
என்னிஷ்டம் ஏன்?
கண்மூடிச் செவிபொத்திக்
கட்டையாய்க் கிடப்பதற்கா?
கட்டையாய்க் கிடந்தாலும்
போகஸ்லைட் புழுக்கத்தில்
உணர்வலை உருகிப்போய்
வேர்வையாய் வழிகிறதே
மூக்கைப் பொத்திக்கொள்.
••••
உங்களிடம் இன்பம் இருக்கலாம்; நீங்கள் ஒரு புதிய திருப்தியைக் காணலாம், ஆனால் விரைவில் அது சோர்வாக மாறுகிறது.
ஏனென்றால் நமக்குத் தெரிந்த விஷயங்களில் நிரந்தரமான மகிழ்ச்சி இல்லை.
முத்தத்தைத் தொடர்ந்து கண்ணீர் உள்ளது; சிரிப்பைத் தொடர்ந்து துன்பமும் சீர்கேடும் உள்ளது.
எல்லாம் வாடுகிறது; எல்லாம் சிதைகிறது.

No comments:
Post a Comment