Tuesday, July 8, 2025

ஜீலை 8, ராஜபாளையம் இராண்டாம் தமிழக முதல்வர்.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களின் பிறந்த நாள். நேர்மையின் முகவரி. அவரை மகிழ்ந்து என்றென்றும் போற்றுவோம்.

 ஜீலை 8, ராஜபாளையம் இராண்டாம் தமிழக முதல்வர்.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களின் பிறந்த நாள். நேர்மையின் முகவரி. அவரை மகிழ்ந்து என்றென்றும் போற்றுவோம்.

எளிமை, நேர்மை, உண்மை ஆகிய மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்து வாழ்ந்த அரசியவாதி யார்?
எத்தனையோ பேர் இருந்துள்ளார்கள், அதில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பி.எஸ். குமாரசாமி ராஜாவைப் பற்றிச் சொல்கிறேன்.
மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் பி.எஸ்.கே. இன்று நீங்கள் ராஜபாளையம் போனால், அங்கு இருக்கும் காந்தி கலைமன்றம் அவர் வாழ்ந்த வீடு. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்துச் சென்றுவிட்டார் பி.எஸ்.கே.
காந்தி பலமுறை அவரது வீட்டுக்கு வந்துள்ளார். போராட்டக் காலத்தில் காமராஜர் இங்கு வந்து தங்குவார். ஓராண்டு காலம் கடலூர் சிறையில் இருந்தவர். இத்தகைய பாரம்பரியமும் பணமும் இருந்தாலும் எளிமை, நேர்மை, உண்மை மூன்றையும் கடைப்பிடித்தவர்.
ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் முதலமைச்சராக அவர் ஆனபோது, 'இதற்கான திறமையோ, யோக்கியமோ, எனக்கு இல்லை’ என்று சொன்னவர். 1952 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் தோற்றபோது, 'இந்தத் தோல்விக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக எந்தத் தண்டனை வேண்டுமானாலும் எனக்குக் கொடுங்கள்’ என்று சொன்னவர்.
அவரது சேவையைப் பயன்படுத்திக்கொள்ள பிரதமர் நேரு நினைத்தார். ஒரிஸ்ஸா கவர்னர் பதவியைத் தந்தபோது, பி.எஸ்.கே. ஏற்கவில்லை. கட்டாயப்படுத்தி ஏற்கவைக்கப்பட்டார். அங்கும் அவரால் இருக்க முடியவில்லை. 'நாட்டின் செல்வம் வடக்கே கொள்ளை போகிறது’ என்று ஒரு விழாவில் இவர் பேச, அவர்கள் விளக்கம் கேட்க, உடல்நிலையைக் காரணம் காட்டி, பதவியைவிட்டு விலகி ராஜபாளையம் வந்துவிட்டார். இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும்?
கழுகார் பதில்கள்!
ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...