Tuesday, July 8, 2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் உ வாசுகி அவர்கள் தீக்கதிருக்கு அதிகம் சந்தா சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு பதிவை அவரது வலைத்தளங்களில் இட்டுள்ளார்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் உ வாசுகி அவர்கள் தீக்கதிருக்கு அதிகம் சந்தா சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு பதிவை அவரது வலைத்தளங்களில் இட்டுள்ளார். அப்பதிவில் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்கிற முரசொலி பத்திரிகையின் ஹைலைட் வாசகம் இடம் பெற்றிருக்கிறது. அதன் அருகே ஒரு மனிதர் மாட்டின் கொம்பை பிடித்து எதிர்த்து நிற்பது போல இருக்கும் முரசொலி இதழின் எம்பளமும் பதிவாகி இருக்கிறது. அப்படியானால் தீக்கதிர்ப் பத்திரிக்கை முரசொலி ஆகிவிட்டதா? ஏற்கனவே ஆங்கில இந்து ஏடு முரசொலி ஆகிவிட்டது!. இப்படித்தான் தமு எ கச அமைப்பு தமிழ்நாட்டை வழி நடத்துகிறது.

சு வெங்கடேசன் கீழடி அகழாய்வு உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் குரல் கொடுப்பார். ஆனால் அவர் காலடியில் உள்ள முல்லை பெரியாறு, கண்ணகி கோவில் ஆகிய சிக்கல்களில் குரல் கொடுக்க மாட்டார். ஏனென்றால் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கிறது அல்லவா.! இதுதான் மார்க்சிஸ்ட்களின் பொலிட்டிக்கல் ஸ்டேட்டஜி. இந்த வகையில் ஸ்டாலினுக்கு நாம் முன்வைக்கும் கேள்வி! அவர் உண்மையில் திராவிட ஆட்சியைத்தான் நடத்துகிறாரா இல்லை கம்யூனிஸ்ட் புத்தி ஜிவிகள் சொல்வர்களின் ஆட்சியை நடத்துகிறாரா! என்பதுதான் நமக்கும் தெரியவில்லை! கவிஞர் கலாப்ரியா போன்ற திராவிட படைப்பாளிகள் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு தெரியவில்லை.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...