#திருநயினாா்நாகேந்திரன்அவர்களின்
#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம் நிறைவு "கண்டதும் கேட்டதும் பெற்றதும்’’……… (12-10-2025 - 9-1-2026) ——————————————————— தமிழகம் தலை நிமிர, தமிழரின் பயணம் தமிழன் யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் திருமிகு நயினார் நாகேந்திரன் அவர்களுடான பயணத்தின் நீட்சியாக 53வது இறுதி நாளான இன்று பகுதி வாழ் மக்கள் சந்திப்புகளுடன் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டமாக பனியன் சிட்டி என்று அழைக்கப்படுகிற திருப்பூரில் நேற்று இரவு முடிந்தது. திருப்பூரில் இன்று பாஜக பொதுக் கூட்டம்: நயினாா் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்றளர 12-10-2025 அன்று மதுரையில் தொடங்கி புதுக்கோட்டையில் இந்த மக்கள் சந்திப்புக்கான அரசியல்பயணம் ஏற்கனவே முடிவடைந்து இருந்தாலும் இந்த 53 நாட்களும் பா ஜ க தலைவருடன் நான் உற்சாகமாகப் பயணித்தேன். பல்வேறு உரையாட்களுடன் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்தமான பிரச்சனை குறித்த உரையாடலாகவும் கூர்மையான அவதானமாகவும் பார்வையாகவும் அமைந்த ஒரு அருமை பயணம் இது!அது மட்டுமல்லாமல் ஒரு தனி மனிதனின் சமூக மனநிலைக்கு ஏற்ற அரிய அனுபவம் என்றும் கூட இதை நான் சொல்லுவேன். இந்தப் பயணத்தின் நிறைவு விழாவை மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் புதுக்கோட்டை மேடையில் நிறைவு செய்திருந்தாலும் அவரின் நுட்பமான தமிழ் மக்களின் மீதான அக்கறையோடு அவர்கள் உண்மையில் எதை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற அறிவுறுத்தலோடு கலந்த உரைக்குப் பிறகும் சில பொதுக்கூட்டங்களாக இந்தப் பயணம் தொடர்ந்து சென்று இன்றுதான் முடிவு அடைந்தது. 53 நாட்களாக தமிழகத்தின் பாரதிய ஜனதா தலைவருடன் திரு நயினார் நாகேந்திரன் அஅவரகளுடன் பல்வேறு தமிழகப்பகுதிகளுக்கு பயணம் செய்து மக்களிடம் விவசாயிகளிடம் சிறு தொழில் செய்பவர்களிடம் இன்னும் பல்வேறு எளிய மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டும் நடந்தும் தொடர்ந்தும் சென்று வந்தது ஒரு மகத்தான அனுபவம் மட்டுமல்ல உண்மையில் மக்களுக்கு அரசுக்கும் இருக்கக்கூடிய இடைவெளிகளைப் புரிந்து கொள்ள இந்த பயணம் ஒரு திறப்பாக அமைந்தது என்பது தான் முக்கியமானது. மக்கள் சொல்கிற அவலங்கள் நதிநீர்த் திட்டங்கள் இன்னும் பல நிறைவேற்ற முடியாத இந்த அரசின் சென்றடைய முடியாத நிலங்களின் கவனக்குறைகள் பாராமுகங்கள் அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேறாத குறைபாடுகள் யாவற்றையும் அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் அவர்கள் மாற்றங்களை நோக்கிக் காத்திருக்கிறார்கள். இந்தக் குடும்ப அரசியல் மீதான அதிருப்தி வெளிப்படையாகவே அவர்கள் பேச்சில் இருந்தது. அவர்கள் இலவசங்களை எங்கள் மீது திணிக்கிறார்கள் என்றும் சொன்னார்கள். வருகிற தேர்தலில் இந்த பொங்கல் நாளில் பழையன போக்கி புதிய வழிகள் பிறக்கும் என்பதைப் போல வருகிற 2026 தேர்தலிலும் ஊறிப்போன பல பழையன யாவும் கழிந்து விடும் என்று நான் நம்புகிறேன்.தமிழக பாஜக தலைவருடன் அமைந்த இந்தப் பயணத்திவ் மேற்கண்ட எங்களின் அவதானம் மிக முக்கியமானது.Saturday, March 21, 2026
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
No comments:
Post a Comment