#சென்னை49வதுபுத்தகக்கண்காட்சி
‘’நான் இந்த புத்தகத்தை படிக்கவில்லை ஆனால் அற்புதம்” - புத்தக வெளியீட்டு விழாக்களில் லேட்டஸ்ட்
பேஷன்.
திருவிளையாடல் தருமி வசனங்கள்…. இன்றைய விருதுகள்!
———————————————————
சென்னை 49 வது புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் பட்டிமன்ற பேச்சாளர்கள் எனப் பலரும் புத்தகக் கண்காட்சி மேடையை அலங்கரிக்கிறார்கள். என்ன பயன்? ஒரு எழுத்தாளர் என்பவன் சமூகத்தின் மனசாட்சியாக இருக்கிறான் என்று சொல்கிறார்கள் இங்கே 99% பேர் படைப்பாளி என்கிற பெயரில் பலர் இன்றைய திமுக ஆளுங்கட்சிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் குடும்ப அரசியலுக்கும் ஆதரவாக கொடி பிடித்துக் கொண்டு அவர்களைத் தூக்கி வைத்துப் பேசிக்கொண்டு கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்கிறார்களோ இல்லையோ இவர்களே எல்லோருக்கும் பதிலைச் சொல்கிறார்கள்.
திமுக தலைமையோ இவர்களுக்கு எல்லாம் ஆளுக்கு ஒரு விருதைக் கொடுத்து வாயை அடைத்து விடுகிறது. செல்லப் பிராணிகளுக்கு வீடு வாசல் எல்லாம் தந்து போஷிக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் பதவிகளையும் பட்டங்களையும் அரசாங்கத்தை நத்தி பெற்றுக் கொண்டிருக்கும் இந்த படைப்பாளிகள் ஒரு காலத்தில் திமுகவை கேவலமாக விமர்சித்தவர்கள். அதாவது தங்களை யார் கேவலமாக விமர்சிக்கிறார்களோ அவர்களுக்கு விருது பட்டம் பதவியைக் கொடுப்பது திமுகவின் வழக்கமாகிக் கொண்டு வருகிறது.
எடப்பாடி ஆட்சி காலத்தில் அவரையும் எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்த இந்தப் படைப்பாளிகள் எல்லோரும் என்று சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம் பேர் இன்று திமுகவில் இணைந்து அங்கு நடக்கும் எந்தத் தவறையும் கண்டுகொள்ளாமல் அவர்களை ஒரு துளி கூட விமர்சிக்காமல் ஏற்றுக்கொண்டு தாங்களும் படைப்பாளியாகச் சொல்லிக் கொள்கிறார்கள் என்பதை நினைக்கும்போது இலக்கியமும் சோரம் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
ஒரு நண்பரின் குரல்…வருமாறு..
‘’முன்பொரு காலத்தில் புத்தகத் திருவிழாவில் குடியிருந்தேன் என்று சொல்லுமளவுக்கு கிடையாய்க் கிடந்தேன்
இப்போது புத்தகங்கள் மீது சலிப்பில்லை. இலக்கியம் பேசுவோர் எழுதுவோர் மீது பெரும் சலிப்பு. அவர்களின் இருமுகங்கள் எரிச்சலைத் தருகின்றன
அரசை தூக்கிப் பிடிக்கவே இலக்கியம் என்பதாகத்தான் இங்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரின் செயல்பாடாக இருக்கிறது. இந்த ஐந்தாண்டு காலத்தில் பெரும்பாலான எழுத்தாளர்கள் அரசின் அடிமைகளாகிப்போனதைக் கண்ணுற்றேன்’’
•••
இவர்களில் பலர் எல்லாம் உண்மையான படைப்பாளிகள் தானா என்று கேட்கிறேன்?! புத்தகச் சந்தைக்குப் போகவே பயமாக இருக்கிறது. நான் அக்காலத்தில் காயிதே மில்லத் கல்லூரியில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கும் போது பல வருடங்களாகச் சென்று வந்தவன். ஆனால் இன்று ஆளும் கட்சிக்குப் பாயிரம் பாடும் எழுத்தாளர்களைச் சந்திக்க நேரிடுமே என்று கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த நந்தனம் புத்தகச் சந்தைக்குச் செல்வதில்லை. எந்தப் புத்தகத்தையும் படிக்காமலே சபாஷ் அருமை என்று சொல்லி தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ளப் பழகி விட்டார்கள். ஒரு காலத்தில் அவர்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் எந்த உண்மைகளையும் துணிச்சலாகப் பேசிய ஜெயகாந்தன் பிரபஞ்சன் கி ரா போன்றவர்களை பல தமிழ் படைப்பாளிகளை நினைத்துக் கொள்கிறேன்.
திருவிளையாடல் தருமி வசனங்கள், குறிப்பாக "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைதும்பி" பாடல் நினைவில்
வருகிறது
#சென்னை49வதுபுத்தகக்கண்காட்சி
#chennaibookfair2026
#DMKFailsTN
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
Monday, March 23, 2026
#சென்னை49வதுபுத்தகக்கண்காட்சி
Subscribe to:
Post Comments (Atom)
Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’
கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment