சமீபத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் '#Vibeswithmks' என்ற நிகழ்ச்சியை நடத்திய போது, பழைய மற்றும் புதிய திரைப்படப் பாடல்கள் குறித்து அவரிடம் கருத்துகள் பகிர்ந்தனர். என்னை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், அவரை நான் எம்.கே.எஸ் என்று அழைக்கும்போதெல்லாம் அவருக்குப் பிடிக்காமல் போனதுதான்.
கடந்த 2016இல் நான் அவரை எம்.கே.எஸ் என்று அழைத்ததிலிருந்து அவருக்கு என்னைப் பிடிக்காமல் போனது இன்று வரை எனக்கு ஏன் தெரியவில்லை. இந்தியா டுடே வாசந்தியிடம் கலைஞர் பற்றி நான் பேசியபோது முதல்வர் ஸ்டாலினை எம்.கே.எஸ் என்று பிரியமாக அழைத்தேன். ஆனால், அதே பெயரை நான் பயன்படுத்தியபோது ஏன் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்? பத்திரிகையாளர் மணாவிடம் முதல்வரின் தங்கை கனிமொழி பேசும்போது, கே.எஸ்.ஆர் முதல்வரை எம்.கே.எஸ் என்று அழைப்பதாகக் குறைபட்டுக் கொண்டார். இதில் என்ன தவறு இருக்கிறது? எம்.ஜி.ஆரை எம்.ஜி.ஆர் என்று அழைத்ததைப் போலத் தானே இதுவும். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இவரை ஈழத்தமிழ்ர் பற்றி பேச நான் அழைத்தது சென்ற போதும் அங்கே MKS என்று இருந்தது. ஈழததமிழர்கள் குறித்து ஐநா அவைக்கு செல்லும் போது நான் தயாரித்த கலைஞர் கையெழத்திட்ட ஆவணங்களிம் இருந்தது . டி.ஆர்.பாலு 2014இல் டெல்லியில் Constitution Club இல் நடத்திய மாநாட்டில் எம்.கே.எஸ் என்று தானே போர்டு வைத்திருந்தார். அவர் சொன்னால் மட்டும் பிடிக்கிறது, நான் சொன்னால் பிடிக்காது என்பது எப்படி நியாயம்? கலைஞருக்கு இது புரியும். கலைஞரின் குடும்பம் என்பதால் கிடைத்த வாய்ப்பு என்று சொல்வதை விட, ஆட்சியில் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்பு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நான் எம்.கே.எஸ் என்று அழைத்த போது தவறு என்று சொன்னவர்கள், இன்று அதே பெயரைப் பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்தும் போது மட்டும் ஏன் பெருமிதம் கொள்கிறார்கள்? #Vibeswithmks #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment