#ஆடத்தெரியாதவர்கள்தெருக்கோணல்…
#ஸ்டாலின் அவர்களே!
டபுள் இன்ஜினா
டப்பா இன்ஜினா
———————————————————————————-
டபுள் இன்ஜினா! டப்பா இன்ஜினா! என்பதெல்லாம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். எப்பொழுதும் டப்பா இஞ்சின் என்பது திமுக தான்! ஒரு காலத்திலும் திமுக கூட்டணி இல்லாமல் ஜெயித்ததாக வரலாறு இல்லை. கூட்டணி வைத்து உள்ளேயே உழப்பி அவர்களை எல்லாம் பணம் கொடுத்துப்பயன்படுத்திக் கொண்டு பிறகு ஸ்டாலின்ஜெயித்தார் என்று சொல்வதுதான் அவர்களது வழக்கம்!
ஸ்டாலினோ இல்லை அவரது தங்கை கனிமொழியோ நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எத்தனை சதவீதம் நிறைவேற்றினீர்கள் என்று வெள்ளையறிக்கை கொடுங்கள்! அல்லது மத்திய அரசு மாநிலத்திற்கு கொடுத்த பணத்தை எப்படிச் செலவு செய்தீர்கள் எதற்காகச் செலவு செய்தீர்கள் என்பதற்கான வெள்ளை அறிக்கையாவது கொடுங்கள்! 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாள் சென்று தேற்றிக் கொடுத்திருக்கிறது மத்திய அரசு!!. வாங்குகிற நிதியை எல்லாம் வாங்காமலா நீங்கள் அரசை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்! எப்போது பார்த்தாலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை மறுத்துவிட்டது என்று பொய்ச் செய்திகளைப் பரப்பும் நீங்கள் இதுவரை மத்திய அரசு கொடுத்திருக்கும் பணத்திற்கும் நீங்கள் செலவழித்ததற்கும் ஆன வெள்ளை அறிக்கையை மக்களிடம் பொதுவாக முதலில் வையுங்கள். அப்போது தெரிந்துவிடும் உங்கள் ஆட்சியின் லட்சணம் என்ன என்பது.
ஆடத் தெரியாதவர்கள் தெருக்கோணல் என்ற கதையாக இருக்கிறது இவர்கள் விடும் அறிக்கைகள்.
#DMKFailsTN
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
No comments:
Post a Comment