திமுகவில் ஐம்பது வருடம் கிராமக் கிளைக்கழகச் செயலாளராகவே இருந்து, ஒரு ஊராட்சி ஒன்றியக் கட்சிப் பொறுப்பைக் கூட எட்டிப் பிடிக்க முடியாமல் செத்துப்போன எத்தனையோ 'அடிமட்டத் தொண்டர்களை' பார்த்திருக்கிறேன். ஒரு கட்சியின் உண்மையான தொண்டனாகப் பிறந்து, கடைசி வரை தொண்டனாகவே மடியும் உபிகளின் வாழ்நாள் துயரம் மிகக் கொடியது.
வாரிசு அரசியலை விடுங்கள்... தலைவரின் மகன், பேரன் என வரும் வாரிசு வரிசையைக் கூட ஏதோ ஒரு லாஜிக் சொல்லி இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றே வைப்போம். ஆனால், அடிமட்டத் தொண்டனின் ரத்தத்தை உறிஞ்சும் உண்மையான வலி எது தெரியுமா? காலம் பூராவும் அதிமுகவில் சகல பதவிகளையும், அதிகாரத்தையும் அனுபவித்துவிட்டு, அங்கே இடம் இல்லாதபோது ஜன்னல் வழியாகத் துண்டு போட்டு திமுகவில் நுழையும் 'வந்தேறிகள்' வந்த உடனே அவர்களுக்குத் தரப்படும் உயரிய பதவிகள். பல தசாப்தங்களாகக் கட்சிக்காக உழைத்த ஒரு கடைநிலைத் தொண்டன், நேற்று வந்த அந்த மாற்றுக்கட்சிக்காரனுக்காகப் போஸ்டர் ஒட்ட வேண்டிய அவலம். இதெல்லாம் அந்தத் தொண்டனின் விசுவாசத்திற்குத் தரப்படும் தண்டனை அல்லவா? "அதிமுகவை பாஜக மெல்ல மெல்ல விழுங்குகிறது" என்று கிண்டல் செய்யும் உபிகளே... அதிமுகவில் இருந்து வந்தவர்கள் இன்று திமுகவில் எந்தெந்த இடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று பாருங்கள்! அதிமுகவை பாஜக விழுங்குவதை விட, திமுகவை அதிமுகவின் 'மாஜிக்கள்' நேரடியாகச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது 'அறிவுள்ள' உபிகளுக்கு ஏன் புரியவில்லை? இதுதான் திமுக… அதன் மாடல் எங்கோ படித்தியது…
Subscribe to:
Post Comments (Atom)
Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’
கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment