சிலர் பேசுவதைக் கேட்டால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. த வெ க வின் புஸ்ஸி ஆனந்த் “2026 தேர்தலில் நாம் ஜெயித்து வந்து விட்டால் த வெ க உறுப்பினர்களில் 26 வயது உள்ள இளைஞர்களுக்கு எல்லாம் உடனே வேலை வாய்ப்பு உறுதியாகத் தரப்படும்” என்று சொல்கிறார்.
எந்த ஒரு அரசியல் வரலாற்று சம்பவங்களிலும் இடம்பெறாத தமிழக அரசியலின் நீளஅகலங்கள் மற்றும் மக்களின் அன்றாடப் பாடுகள் எதுவும் தெரியாத ஒரு பத்தாம்பசலித்தனமான பேச்சைப் பேசியிருக்கிறார் இந்த ஆனந்த்!. எதோ விஜய் ஆட்சிக்கு வந்து விட்டால் ஏதோ பண்ணி விடுவார் என்பது போல ஒரு அசட்டுத் துணிச்சல் உள்ள இந்த ஆனந்த் எதற்காக இப்படிக் கத்துகிறார்!? அதுசரி! ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம்! அதற்கு சட்ட திட்ட நெறி முறைகள் இல்லையா? அதுவும் இவர்களுக்கு கிடையதா? இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு காலத்தில் செந்தில் பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள மணல்களை அள்ளி நாம் சந்தையில் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்று சொல்லி ஓட்டுக் கேட்டது போல இருக்கிறது. யோசித்துப் பார்க்கும்போது இந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பேச்சு எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது மிகுந்த அவலமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நான் இந்தச் சூழலில் முடிந்தவரை சொத்து சேர்த்துக் கொள்கிறேன் அதில் உங்களுக்கும் கொஞ்சம் தருவேன் என்பது மாதிரி இவர்கள் தரும் வாக்குறுதிகள் தொடர்ந்து இருக்கின்றன. இந்த புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களெல்லாம் தமிழக அரசியலில் இடம் பெறுவார்கள் என்று ஒருபோதும் யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்¡? விதியே விதியே எம் தமிழ்ச் சாதியை என்ன செய்யப் போகிறாய்! #tvk
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment