பிரதமர் மோடி அவர்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் சொல்லியபடி தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி கண்ணியமாக அமைகின்றது. நடப்பில் உள்ள இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய காலம் நெருங்கி விட்டது. போலி மதச்சார்பின்மை! குடும்ப வாரிசு அரசியல்! ஊழல் வழியான சொத்துக் குவிப்பு! இலவசங்கள் வழியாக மக்களை ஏமாற்றி ஓட்டு வங்கியைத் தக்க வைத்தல்.! கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புதிய வாக்குறுதிகளை பம்மாத்தாகத் தருவது போல நடித்தல்! போன்றவற்றால் இந்த ஆட்சி அடைந்திருக்கும் ஏக போக கொள்ளைகளைத் தடுக்க இந்த 2026 தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தத் திமுகவிற்கு துதி பாடும் கட்சிகள் கூஜா தூக்குகிற கம்யூனிஸ்டுகள் இவர்களையெல்லாம் வீட்டிற்கு விரட்ட வேண்டும் என்று அமித்ஷா சொன்னது சரியாகவே அனுமானிக்கப்படுகிறது. அவர் சொல்லும் பொழுது கூட்டணியில் 30 40 சீட்டுகள் எல்லாம் கேட்டு சிரமப்படாதீர்கள்.20 சீட்டுகள் இருந்தால் கூடப் போதும் வெற்றி பெறும் இடங்களிளையே கூட்டணியில் கேட்டு வாங்குங்கள் என்று சொல்லி இருக்கிறார். அந்த அளவிலேயே விட்டுக் கொடுத்து தோழமைக் கட்சிகளும் இக் கூட்டணியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு ஒரே நோக்கம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான். இந்த மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சொன்னது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இக்கூட்டணியை நல்லவிதமாக பியூஸ் கோயல் நடத்திக் கொண்டு வருகிறார். இதையெல்லாம் மனதில் கொண்டு நிதானமாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியும் விட்டுக் கொடுத்துச் சிறப்பாக ஒத்துழைக்கிறார். இந்தக் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் என்ற இலக்கில் பயணிக்கிறார்கள்! வாழ்த்துக்கள்!! Tailpiece மனோஜ் பாண்டியனுக்கு ஆலங்குளம் கொடுத்தாச்சு... மைத்ரேயனுக்கு மயிலாப்பூர் கொடுத்தாச்சு.. மருது அழகுராஜகு திருப்பத்தூர் கொடுத்தாச்சு.. அன்வர் ராஜாவுக்கு ராமநாதபுரம் கொடுத்தாச்சு சுப்புரத்தினம்க்கு உடுமலை கொடுத்தாச்சு வைத்திலிங்கத்துக்கு ஒரத்தநாடு குடுத்தாச்சி ராமசந்திரன் க்கு குன்னம் கொடுத்தாச்சு.... ஏற்கனவே அதிமுகவில் இருந்து வந்தவர்கள் திமுகவில் அமைச்சரவையில் பலர். இவர்களின் கையில் திமுக என்ற வேதனை வேறு… இதுல ஒருத்தன் கூட திமுக கிடையாது ஓபீ எஸ் கூட வெத்து வேட்டா சுத்தி அரசியல் அநாதை ஆனது க... அப்போ திமுக காரனுக்கு.... அண்ணே அந்த செவ்வாழை பழம் என்ன விலைனே... #DMKFailsTN #dyanstypoltics #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment