#குடும்பவாரிசுஅரசியல் #நிதின்நபின்
——————————————————— அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத்தலைவராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதே ஆன இளைஞர் நிதின் நபின் அவர்கள் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எங்கோ பிறந்தவர் கட்சியில் மக்களிடையே உழைத்தவர்! எதிர்பாராத வகையில் அவருக்கு பாரதிய ஜனதா இந்தப் பதவியை வழங்கி இருக்கிறது அவருக்கான உற்சாகமான வரவேற்புடன் பாரத பிரதமர் மோடி அவர்கள் அவர் எத்தனை இளையவராக இருந்தாலும் நிதின் நவீன்தான் எனக்கும் தலைவர் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுதான் உட்கட்சி ஜனநாயகம் என்பதன் உண்மையான அர்த்தம். அதுதான் இந்தத் தேர்வில் நிறைவேறி உள்ளது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து கவனித்து வரும் ஆச்சரியம் என்னவெனில்தேச நலன் சார்ந்து தங்கள் துறை சார்ந்த நேர்மையுடன் புத்திசாலித்தனத்துடன் உண்மையுடன்செல்படக்கூடிய அத்தனை பேர்களையும் உடனே பாஜக என்று முத்திரை குத்துகின்றார்கள். ஆனால் பாஜக கட்சியில் இருப்பவர்கள் எவரையும் பாஜக என்று சொல்லாமல் இந்த வாரிசு அரசியல் அடிமைகள வேறு பேர் சொல்லி அழைப்பது ஏன்? ஆனால் திமுக நிறுவனர் அண்ணாவின் குடும்பம் எங்குள்ளது என்பது தெரியவில்.அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் இறந்து போது கூட போகத குடும்பம் திமுகவை கையில் வைத்துள்ளது. இங்கு தமிழ்நாட்டிலும் தான் ஒரு கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அண்ணன் முதலமைச்சர் அவரது மகன் துணை முதலமைச்சர் அவரது மகன் எதிர்கால முதலமைச்சர் முதல்வரின் அன்புத் தங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாமன் மைத்துனர்களும் எம்பிக்கள் இப்படியான குடும்ப வாரிசுகள் போக தங்களின் விசுவாசிகளுக்கும் அடி வருடிகளுக்கும் மாவட்டச் செயலாளர்கள் (அவர்கள் பிள்ளைகளுக்கும் எம்எல்ஏ எம்பி பதவிகள் போக )அமைச்சர்கள் எம்எல்ஏ பதவிகள் என்று ஒரு தனிக்குடும்பம் பிரித்துப் பிரித்து வழங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா பாதைகளும் ரோம் நகரை நோக்கி என்பது போல எல்லா அதிகாரமும் இந்த குடும்பத்தை நோக்கித்தான் தமிழ்நாட்டில் பயணிக்கிறது. இவர்கள்தான் சுதந்திரம் சமத்துவம் முற்போக்கு என்றெல்லாம் பேசிக்கொண்டு ஏகபோக ஊழலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இப்படியான வாரிசு அரசியல் தான் முறை என்றால் இதை விட கேடான விஷயம் எதுவும் இல்லை!இதை விமர்சிக்காமல் பாரதிய ஜனதா மீது அது குறை இது குறை என்று சொல்லிக் கொண்டு தாங்கள் செய்வதை மக்கள் அறியாமல் இருக்க வேண்டி அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகிறார்கள் . மக்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். #DMKFailsTN #திமுக #குடும்பஅரசியல்#பாஜக #bjp #nitinnabin #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்
No comments:
Post a Comment