Monday, March 23, 2026

பிடித்திருக்கிறது

 பிடித்திருக்கிறது

தன்னைத்தானே கவனித்துக்கொள்பவர்களை

குரல் உயர்த்தாமல் கோபத்தை வெளிப்படுத்துபவர்களை வெற்றிகளில் கர்வம் கொள்ளாதவர்களை விமர்சனங்களைக் கண்டுகொள்ளாதவர்களை முகத்திற்கு நேராய் பொய் சொல்லாதவர்களை உவப்பில்லா இடத்திலிருந்து வேகமாக வெளியேறுபவர்களை பிடித்திருக்கிறது அத்தனைக்குப்பின்பும் கண்களைத் துடைத்தப்படி வாழ்வோடுப் போராட சிறு புன்னகையோடு மீண்டும் மீண்டுமாய் தயாராகும் என்னை
சமயங்களில் எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது


No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...