Monday, March 23, 2026

முன்பு அத்வானி !

 முன்பு அத்வானி !

இன்று அந்த இடத்தில் அமித்ஷா...
என்னதான் கொள்கை,சித்தாந்தம் என்றாலும் அயராது உழைத்து ,கட்சியை வளர்த்து ,வாஜ்பாயை பிரதமராக்க பாடுபட்டவர் எல் .கே .அத்வானி... கலாச்சார தேசியம்,போலி மதசார்பின்மை போன்ற கோஷங்களை 1980 களின் இறுதியில் எழுப்பி , ராமர்கோவில் இயக்கத்தில் பாஜகவை பங்குபெற வைத்து, கரசேவைகளில் ஈடுபட்டு, நாடு முழுவதும் பல ரதயாத்திரைகளை நடத்தி , பாஜகவை வெற்றிபெற வைத்து.... வாஜ்பாயை பிரதமராக்க அர்ப்பணிப்போடு கடுமையாக உழைத்தவர் எல்.கே.அத்வானி... இன்று அதுபோல உழைப்பவர் அமித்ஷா... நாட்டு நிர்வாகம், வெளியுறவு போன்ற விஷயங்களில் பிரதமர் மோடி அதிகநேரம் செலவழிக்க, உள்நாட்டு பாதுகாப்பு,கட்சிப்பணி என மோடியின் வேலைப்பளுவை குறைத்து ,கட்சியின் வெற்றிக்கு அயராது பாடுபடுகிறார் அமித்ஷா.... ஒவ்வொரு மாநிலங்களிலும் கூட்டல் கணக்குகளை சரியாக கணித்து.... அதற்கேற்ப வியூகம் வைத்து , பல தொடர்வெற்றிகளுக்கு காரணமாக இருக்கிறார் இந்த நவீன சாணக்கியன்.... நேற்றைய வாஜ்பாய்-அத்வானி வரிசையில் ... இன்று மோடி-அமித்ஷா...


No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...