Thursday, March 26, 2026
#முதல்வர்ஸ்டாலின்அவர்களே!
#இனிமேல்எம்ஜிஆரைபெரியப்பாஎன்றுஅழைக்காதீர்கள்! அவரை விட்டு விடுங்கள்!
———————————————————
நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வீட்டில் பெண் கேட்ட கதையாக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் எம்ஜிஆர் எனது பெரியப்பா என்று சொல்லுகிறார். எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்ப்பேன் என்றும் அவர் பாடியதில் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அள்ளிவிட்டுப் போகிறார்.
கலைஞரின் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு காலகட்டத்தை ஆரம்பித்து வைத்த எம்ஜிஆர் அண்ணா இறந்த பிறகு கலைஞர் முதல்வராவதற்கு தன்னுடைய முழு ஆதரவையும் தந்த எம்ஜிஆர் இன்று கலைஞர் திமுக என்பது மாறி ஸ்டாலின் திமுகவாக வளர்ந்து தனித்த சொத்துகளை அதன் வாரிசுகளாக அனுபவித்துக் கொண்டு வாழும் கலைஞரின் குடும்ப அரசியலுக்கு வித்திட்ட எம்ஜிஆர் என்னும் மாபெரும் மக்கள் சக்தி மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எம்.ஜி.ஆர் பாடலை பாடுவேன் என்கிற இன்றைய முதல்வர் அவர் மறைந்த பிறகு அவருடைய பிறந்த தினத்தன்றும். நினைவு தினத்தன்றும் எத்தனை முறை அவரது சிலை, நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்துள்ளார் என்று மக்கள் முன்பு இதே போல எம்ஜிஆர் பாசத்துடன் சொல்ல வேண்டும். வாயில் வடை சுடும் பாசாங்கு இருந்தாலும் எம்.ஜி.ஆர் மீது வன்மம் கொண்டிருப்பவர் தான் ஸ்டாலின். அதேபோல் மதிமுக பிரிந்த பிறகு வைகோவுடன் சென்று விட்டதாக எங்களைப் போல உண்மையாகதிமுகக் கட்சிக்கு உழைத்தவர்கள் மீது வன்மத்தைக் காட்டிக்கொண்டும் வாழ்நாள் முழுக்க திமுகவை எதிர்த்துப் போராடுவேன் என்று சொன்ன வைகோவை மட்டும்அணைத்துக் கொள்ளும் இந்த தந்திரங்களை மறைப்பதற்கு எம்ஜிஆர் பாடல்கள் தான் கிடைத்ததா முதல்வர் அவர்களே? அப்படியான எண்ணம் இல்லாவிட்டால் அதிமுக சார்ந்தவர்கள அங்கிருந்து பிடித்துக் கொண்டு வந்து அமைச்சர்கள் மறறும் பதவிகளை கொடுத்துத் தக்க வைத்துக் கொள்வீர்களா? ஓ இதுதான் ஒருவேளை எம்ஜிஆர் பாசமோ அப்படி என்றால் எம்ஜிஆர் தீய சக்தி என்று யாரைச் சொன்னார்.
ஆனால் இத்தகைய நெருக்கடிகளை எல்லாம் உண்மையில் எதிர்கொண்டவர் கலைஞர் தான் அவர் சில நேரங்களில் தன்னை உணர்ந்து பொறுமையாக இருப்பார்.
உங்களை மாதிரி உள்ளே வெளியே விளையாட்டு எல்லாம் விளையாட மாட்டார். நீங்க எல்லாம் எங்களைப் போன்றவர்களைப் பார்க்க கூடாத ஏதோ ஒரு ஜென்மம் பகை போல தவிர்ப்பீர்கள்? எந்த தியாகமும் செய்யாமல் இன்றைக்கு உங்களுக்கு கிடைத்திருக்கும் வசதி அப்படி இருக்கிறது. என்ன செய்ய? தயவு செய்து இனிமேல் எம்ஜிஆரை பெரியப்பா என்று அழைக்காதீர்கள்! அவரை விட்டு விடுங்கள்!
#எம்ஜிஆர்_திமுக
#MGR_dmk
#DMKFails
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment