Saturday, March 21, 2026

jan 13

 வைகோ நடை பயணம் நடந்தார் இன்னும் நடப்பார். சரி! அது அவரது அரசியல் வாழ்க்கை.

வைகோ சமத்துவம், மதுஒழிப்பு, போதை ஒழிப்பு சார்ந்து இளைஞர்களைத் திருத்த வேண்டி மதுரையில் நடைபயணம் நடந்து முடித்தாராம். இதைக் குறித்து கவிஞர் வைரமுத்து முகப்புத்தகத்தில் ஒரு கவிதை எழுதி உள்ளார். அதில் தமிழ்நாட்டை விட்டு மது வெளியேறாமல் இருக்கலாம். ஆனால், மதுவை விட்டுத் தமிழர்களே வெளியேறுங்கள்” அப்படியானால் மதுவை தயாரிப்பவர்கள் அல்லவா நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அதை விற்பவர்களும் வெளியேற வேண்டும் அல்லவா? மதுவைத் திறந்து விட்டு அடைப்பதற்கு ஆள் அனுப்புகிறார்கள் அதற்கு ஒரு நடை பயணம். மதுவாலும் போதைப் பொருளாலும் தமிழ்நாட்டு இளைய சமூகம் இந்த அரசாங்கத்தின் கீழ் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது மது ஒழிப்பு பற்றி வைரமுத்து கவிதை எழுதுகிறாராம்! பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக இருக்கிறது.அந்த கவிதையில் என்ன இருக்கிறது?. எல்லோரும் வைகோவிற்கு பின் திரள வேண்டுமாம்! திரண்டவர்கள் எல்லாம் காணாமல் போய் தனிமையில் கிடக்கிறார் வைகோ. எந்த மேடையிலாயாவது போய் அலங்காரமாக பேசிக் கொள்வது திமுக சார்பில் நின்று கொண்டு. அநீதி கண்டு பொங்க வேண்டிய கவிஞன் ஆதிக்க நிழலில் சபையாடுகிறார். எல்லாம் காலத்தின் கோலம்.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...