Saturday, March 21, 2026

jan 14

 திருநெல்வேலி, பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தென்னகத்து மண்.அண்ணா அவர்களாலும், மக்களாலும் டி.வி.என் என அன்புடன் அழைக்கப்பட்ட

நடிக மணி டிவி.நாராயணசாமி எட்டையாபுரம் அருகில் உள்ள, சி.துரைச்சாமி புரம் சிற்றூரில் 1921ல் பிறந்தார். எனது உறவினர். 1989.1996 சட்டமன்ற மன்ற தேர்தல்களில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எனக்கு தேர்தல பணி ஆற்றினர். 1936ம் ஆண்டு, டி.கே.எஸ் சகோதரர்களின் மதுரை *பால சண்முகானந்த சபா* வில் சேர்ந்து, புராண, சரித்திர, சமூக, நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார் *சந்திரோதயம்* நாடகத்தில் அண்ணா அவர்களுடன் சேர்ந்து டி.வி.என் சீர்திருத்த வாலிபனாக நடித்தார். நடிகமணி டி.வி.என்*அவர்களின், ஆற்றல்மிகு நடிப்பை அண்ணா, பெரியார், கலைவாணர் என்.எஸ்.கே மூவரும் பார்த்தார்கள்!வியந்தார்கள்!! அண்ணாவின் *ஓர் இரவு* நாடகத்தின் ஐம்பதாவது நாள் விழாவில், "மேடைப் பேச்சாளனாக, எழுத்தாளனாக, இருந்து வந்த எனக்கு, முதன் முதலில் கலை உலகை பற்றி சிந்திக்கத் தூண்டியவர், நடிகமணி டி.வி.நாராயணசாமி அவர்கள் தான், எனப் பெருமையோடு பாராட்டினார் பேரறிஞர் அண்ணா. வரலாற்றுச் சிறப்புமிக்க பல நாடகங்களை எழுதி, வரலாறு படைத்த அண்ணா , சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தை எழுதி, வரலாற்று நாயகன்* நடிகமணி டி.வி.என் அவர்களிடம் கொடுத்து, "தம்பி உனக்காக ஒரு நாடகம் எழுதியுள்ளேன், படித்துப்பார்" என்றார். அண்ணா.இந்த நாடகம் நமது கொள்கை முரசாக விளங்குகிறது, விரைவில் அரங்கேற்ற வேண்டும் என்றார்,டி.வி.என். சிவாஜி வேடத்தில் நடிப்பதற்கு சிறந்ததொரு நடிகரை தேடிக் கொண்டிருந்தார், அப்போது அவருடன் பாசத்துடன் பழகிய, மக்கள் திலகம் எம்ஜி இராமச்சந்திரனை, அண்ணா அவர்களிடம் அழைத்துச் சென்று, சிவாஜி வேடத்தில் நடிப்பதற்கு பொருத்தமானவர், எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் தான், என்று அறிமுகப்படுத்தினார். சந்தர்ப்ப சூழ்நிலை, அந்த நாடகத்தில் *எம்ஜிஆர்* அவர்கள் நடிக்க முடியாமல் போனது, அப்போது, அண்ணாவின் திராவிட நாடு அலுவலகத்தில் தங்கியிருந்த, நாடக நடிகர் *வி சி கணேசனை அழைத்துச் சென்று, சிவாஜி வேடத்திற்கு இவரை போடலாம் என்று *அறிமுகப்படுத்தினார்*, டிவிஎன் அவர்கள், 1945, டிசம்பர் 15ஆம்நாள் சென்னை ஜெயின் மேரிஸ் மண்டபத்தில், தந்தை பெரியார் தலைமையில் நடந்த நாடகத்திலிருந்து தான் கணேசன்.. சிவாஜி கணேசன் ஆனார். 1946ம் ஆண்டு இலட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் உடன் பிறந்த தங்கை பாப்பம்மாளை கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். அதே மேடையில் அண்ணா அவர்கள் தலைமையில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களுக்கும், பங்கஜ குமாரி அவர்களுக்கும் திருமணம் நடந்தது சிறப்பு வாய்ந்தது. *துளி விஷம்* , *மணிமகுடம்* மற்றும் பல நாடகங்களில் நாடகத்தில் நடித்து, லட்சக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றார்,டி.வி.என். *பராசக்தி*, *புதையல்*, *சிவகங்கைச் சீமை*, *அல்லி*, முதலிய திரைப் படங்கள், அவர் நடித்ததில் குறிப்பிடத் தக்கவையாகும். கலைஞரின் கைவண்ணத்தில் , லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், செல்வி ஜெயலலிதா அவர்களும், நடித்த *மணிமகுடம்*, லட்சிய நடிகர் *எஸ்எஸ்ஆர்* அவர்கள் நடித்த *தங்கரத்தினம்*, இளையராஜா அவர்கள் இசையில், ஒளிப்பதிவாளர் அசோக் குமார் இயக்கத்தில் உருவான, *தம்பிக்கு ஒரு பாட்டு* முதலிய திரைப் படங்களையும் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1962 சட்டமன்ற தேர்த லில், மயிலாப்பூர் தொகுதியில், போட்டி யிடுவதற்கு கிடைத்த வாய்ப்பை, *வேண்டாம்* என்று கூறியவர். தேனி தேர்தலில், தேனீயாய் உழைத்து, தேனினும் இனிய வெற்றியைப் பெற்றுத் தந்து, உலக அளவில் அரசியலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டிய, சாதனையாளர் டி.வி.என். தென்னிந்திய நடிகர் சங்க வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தவர் நடிகமணி டி.வி.என். *இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராக* தொடர்ந்து எட்டாண்டுகள் சிறப்பாக பணியாற்றி, நலிவுற்ற கலைஞர்களுக்கு பல நன்மைகளை செய்த சிறப்பின் சிகரமாக விளங்கியவர் டி.வி.என். . "இவர்தான் எம் ஜி இராமச்சந்திரன் என்று என்னை அறிஞர் அண்ணா அவர்களிடம் அறிமுகப்படுத்தியவர் *டிவி நாராயணசாமி" அவர்கள் என்று மேடையில் எம்ஜிஆர் பேசியது பெருமைக் குரியது. கலை உலக தங்கங் களான, கே.ஆர்.ராமசாமி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் முதலியவர்களை, அவ்வப்போது அண்ணா அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்து அவர்களுக்கு அரசியலில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அரசியலில் ஒரு புது திருப்புமுனையை உருவாக்கி, கலையின் ஆட்சி கான செய்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது! #நடிகமணி_டிவிநாராயணசாமி அவர்களின் 101 வது பிறந்தநாள் இன்று. #டிவிஎன்




No comments:

Post a Comment

ja 17