Sunday, December 27, 2015

கோவில்பட்டி கௌரிசங்கர், விழிப்புணர்வு கு.காமராஜ்

கடந்த இரண்டு நாட்களாக துக்கமான செய்திகள் மனதை வாட்டுவதோடு மட்டுமல்லாமல் நண்பர்களை

இழந்துவிட்டோமே என்ற சொல்ல முடியாத கையறு நிலை. கரிசல் இலக்கியத்தில் முக்கிய படைப்பாளியான கவிஞர் கௌரிசங்கர், விழிப்புணர்வு கு.காமராஜ் ஆகியோருடைய மறைவு வேதனையில் ஆழ்த்தியது.

கௌரிசங்கர் கோவில்பட்டியில் பிறந்து தமிழகம் அறிந்த கரிசல் இலக்கிய படைப்பாளி. கடந்த 19.12.2015 இரவு மாரடைப்பால் இறந்தார். 1980 களில் 'மழை வரும் வரை' என்ற கவிதைத் தொகுப்பும், முன்னூறு யானைகள், பின்செல்லும் குதிரை என்ற சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டார். தமிழ் இசையில் ஈடுபாடு கொண்டு காருக்குறிச்சி அருணாசலம் குறித்து ஓர் ஆவணப் படத்தையும் வெளிகொண்டு வந்தவர். கதைசொல்லி இதழோடு தொடர்பில் இருந்தவர். கி.ரா. மற்றும் எனக்கும் நண்பராக திகழ்ந்தவர் இன்றைக்கு இளம் வயதிலேயே அவர் காலமானது மறக்க முடியாத துக்கமான செய்தியாகும்.

சாத்தூர் ஏழாயிரம்பண்ணையில் பிறந்த விழிப்புணர்வு காமராஜும் மாணவப் பருவத்திலிருந்து தொடர்ந்து என்னோடு இருந்தவர். சில நேரங்களில் என்னிடம் ஆலோசனைகள் பெற்று தளங்களில் செயல்படக் கூடியவர். சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று பலமுறை வற்புறுத்தியும், பார்க்கலாம் என்று என்னிடம் தட்டிக் கழித்தவர். கொடூரமாக விபத்தில் மறைந்தது ஏற்றுக்கொள்ள முடியாத கொடிய நிகழ்வாகும்.

கரிசல் வட்டாரத்தை சேர்ந்த இந்த இரண்டு நண்பர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்திற்கு களப் பணிகள் ஆற்றிய தோழர்களை இழந்துவிட்டோம் என்ற துக்க செய்திதான் இதயத்தை தவிக்க வைக்கின்றது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...