Thursday, December 17, 2015

Farmers discussion @ Coimbatore

''விவசாயிகள் கலந்துரையாடல் முதல் கூட்டம்'' முக்கிய அறிவிப்பு 
உழவர் பெருந்தலைவர் சி.நாராயணசாமி ஐயாவின் பிறந்த நாளில் அவரது நினைவைப் போற்றும் வகையில்  பிப்ரவரி 7 ஆம் நாள் கோவையில்  தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் இருந்தும்  விவசாயிகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள்-பிரதிநிதிகள் இயற்கை ஆர்வலர்கள்-சமூக ஆர்வலர்கள்-பத்திரிக்கை -தொலைக்காட்சிகளின்  (ஊடக) முக்கிய விருந்தினர்கள் உட்பட  அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி ஐயாவின் காலத்து மாணவர் தலைவரான கோவில்பட்டி தியாக மண்ணின் போராளி உயர் நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களும் இந்த பெரும் முயற்சிக்கு முழுமையாக முன்னின்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநில விவசாயிகளும் தலைவர்களும்,பிரதிநிதிகளும் கலந்து கொள்ள ஏற்பாடுகளைச் செய்து உள்ளார்கள்.
இக்கூட்டத்தில் 
1.தமிழகம் மற்றும் தேசிய அளவிலான வலுவான விவசாயிகள் 
ஒற்றுமையை மீண்டும் உருவாக்கி விவசாயத்தையும்,மண்ணையும் பாதுகாப்பது.
2.உழவர் பெருமக்களை ஒன்றுபடுத்தி பச்சைத் துண்டோடு தன்மானத்தையும்,சுமரியாதையையும் உருவாக்கிக் கொடுத்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி ஐயா அவர்கள் உயிர் துறந்த மண்ணான 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவருக்கு சிலை அமைத்து 
இந்தியா முழுவதும் இருந்து சமூக ஆர்வலர்கள்-விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைத்து திறப்பு விழா நடத்துவது.
3.விவசாய விளைநிலங்கள் அனைத்தும் கார்பரேட் கம்பெனிகளுக்குப் பறி போகும் நிலையைத் தடுத்து மண்ணையும் மக்களையும் பாதுகாக்க 
செலவில்லா இயற்கை வேளாண்மையை வேளாண் அறிஞர்கள் கோ.நம்மாழ்வார் ஐயா,மகாராஷ்டிரா சுபாஷ் பாலேக்கர் ஆகியோர் காட்டிய வழியில் இளைய சமுதாயத்தை தயார்படுத்தவும்,ஊக்கு விக்கவும்,ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள்,பன்னாட்டு மரபணு மாற்று விதைகள்,மேற்கத்திய ஆபத்தான உணவுப் பழக்கங்கள் 
அனைத்தையும் இந்திய மண்ணில் இருந்து அறவே அகற்றவும்,அதற்கு எதிராக போராடவும் திட்டமிடுவது.
4. நதிகளையும்,மனித மனங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இளைய சமுதாயம் சாதி-மதம்-இனம்-மொழி -நிறம்- நாடு என்ற எல்லைகளைக் கடந்து வாழ பாரம்பரிய வாழ்வியல் விவசாய முறையை மீண்டும் இந்த மண்ணில் வேரூன்றச் செய்ய நாட்டு மாடுகளை மீட்டெடுத்து நீர் வளம் நிலவளம் காக்க திட்டமிடுவது. 
5.விவசாயப் போராட்டம் மற்றும்  உயிர் நீத்த தியாகிகளின் வரலாற்று ஆவணத்தை வெளியிடுவது 
6.கர்நாடகா,ஆந்திரா ,கேரளா மாநிலங்களின் முதல்வர்களைச் சந்தித்து  நதி நீர் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பேசுவது 
7.விவசாய விளைபொருள்களை நேரடி விற்பனை செய்ய உழவர் சந்தைகள் உருவாக்குதல் 
8.விவசாயிகள் பல்வேறு அமைப்புகளாகப் பிரிந்து செயல்படுவதை தவிர்க்க வலுவான ஒரே அமைப்பாகவும் குறைந்தது கூட்டமைப்பாகவும் இணைந்து செயல்படுவது 
9.நாட்டு மாடுகளைப் பாதுகாக்கவும்,அம்மாடுகளைப் பயன்படுத்தி முன்னோர்கள் கையாண்ட வேளாண்மைக்கு திரும்ப முயற்சிப்பது 
10. இளம் விவசாயிகளை ஊக்குவித்து அமைப்பு ரீதியாக இளைய தலைமுறையை ஊர்கள் தோறும்-ஒன்றியங்கள் தோறும்-மாவட்டங்கள் மாநிலங்கள் தோறும் முன்னிறுத்தி விவசாயிகள் இயக்கத்தைக் கட்டமைத்து  கோடிக்கணக்கான  இளைஞர்களையும் இணைத்து 
வலுவான இயக்கமாக காலத்தின் கட்டாயம் கருதி உருவாக்குவது.
இன்னும் மண்ணும்,மக்களும் பயன்படும்  நோக்கில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடி இனி வரும் காலம் உழவர் காலமே என்பதை உணர்த்த அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிரும்பும் அனைத்து விவசாயிகள் அமைப்புகள்,இளைஞர்கள்,இயற்கை ஆர்வலர்கள்,சமூக அக்கறையுள்ள 
அனைவரும்தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். ''விவசாயிகள் கலந்துரையாடல் முதல் கூட்டம்'' முக்கிய அறிவிப்பு 

அனைவரும்தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். 
அன்போடு அழைக்கும் 
பொங்கலூர் இரா.மணிகண்டன் 
ஒருங்கிணைப்புகுழு 
தமிழக விவசாயிகள் சங்கம் 
அன்போடு அழைக்கும் 
பொங்கலூர் இரா.மணிகண்டன் 
ஒருங்கிணைப்புகுழு 
தமிழக விவசாயிகள் சங்கம் 

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...