———————————————————
புத்தாண்டு இன்று,கிசாரி மோகன் கங்குலி எழுதிய முழுமஹாபாரதம் 14 தொகுதிகள்,செ.அருட்செல்வப்பேரரச னால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டத் தொகுப்புகள் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
ஜீரோ டிகிரி-எழுத்து பதிப்பகம் இந்த அரியப் பணியைச் செய்துள்ளனர். மகாபாரதம் காப்பியம் குறித்து விரிவாகவும் கும்பகோணம் பதிப்பில் வெளிவந்த தரவுகளையும் உள்ளடக்கி இந்தத் தொகுப்பு தமிழில் வெளிவந்துள்ளது. ஏறத்தாழ 10,000 பக்கங்களுக்கு மேல் 14 தொகுதிகள் தமிழில் அருட்செல்வப்பேரரசனின் ஒன்பது ஆண்டுகளுடைய கடின உழைப்பில் இந்தத் தொகுப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. கங்குலியின் பாரத்தை ஏற்கனவே அருட்செல்வப்
பேரரசன் இணையத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார் என்பது தகவல்.
வியாசரின் மகாபாரதம் தமிழில் சரியாக இதுவரை வரவில்லை. வில்லிபுத்தூரார் பாரதம், நல்லாப்பிள்ளை பாரதம் இராஜாஜியின் மகாபாரதம் சோவின் மகாபாரதம் என பலரின் மகாபாரதம் தமிழில் வெளிவந்தாலும் இத்தொகுப்பு வித்தியமாகவும் விவரமாகவும் மகாபாரத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் எளிமையாகதமிழில்சொல்லப்பட்டு

ள்ளது.நல்லமுயற்சி.அருட்செல்வப்பேரரசனுக்கும் zero degree,எழுத்து பிரசுரத்திற்கு வாழ்த்துக்கள்.
கிராவுக்கும் ஒரு செட் வாங்கி அனுப்பனும்.
No comments:
Post a Comment