Wednesday, November 20, 2024

சற்று களைப்பாய் இருக்கிறது

 சற்று களைப்பாய் இருக்கிறது

தினம் தினம் இவ்வாழ்வோடு நான் சமரசம் செய்துகொண்டிருப்பது இவ்வளவு அற்ப வாழ்வுக்கா இத்தனை சமரசங்கள் இத்தனை சகித்துக்கொள்ளல்கள் இத்தனை இத்தனை சமாதானங்கள் என நினைக்கையில் சமயங்களில் அத்தனையும் கசந்து விடுகிறது இனி எதனோடும் எவரோடும் எந்த சமரசமுமின்றி வாழ முடிந்தால்தான் எத்தனை நலம் அதுவே இப்போதென் ஆகப்பெரும் பிரார்த்தனையென்பது எதுவுமே நடக்காததுபோல எதையுமே அறியாதவர்கள்போல அத்தனை இயல்பாய் எல்லாவற்றையும் கடந்து போகிறவர்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும் யாருக்காக உன்னை பணயம் வைத்து நின்றாயோ அவர்கள் கரங்களாலேயே ஒருநாள் நீ நஞ்சூட்டப்படுவாய் என்பதுதான் இந்தக் காலத்தின் கசப்பான நியதி இல்லையா

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...