Wednesday, November 20, 2024

a Malini Mala poem. Life in exile always brings a rich crop ofwriting, whether it be African, Sri Lankan Tamil or Algeria or Turkey...wherever..

 a Malini Mala  poem. Life in exile always brings a rich crop ofwriting, whether it be African, Sri Lankan Tamil or Algeria or Turkey...wherever..

Becos it has a time and space of memory, recalled from life now...A time and space etched and revisited so many times


பொழுது மேற்கில் 

சரியத் தொடங்கியிருக்கும் 

பருவத்தின் கரையில் நின்று 

திரும்பிப் பார்க்கிறேன்.

எத்தனை வேகமாகக் கடந்திருக்கிறது காலம்.


அதிவேகத்தில அது கடந்ததா

அடித்து விரட்டியதா புரியவில்லை

நின்று நிதானிக்க நேரமற்றவளாய்

ஓடிக்கொண்டிருந்தேன். 


நின்றால்... 

நிதானித்தால்.....

ஆசுவாசித்து மூச்சு வாங்கினால்

காலடியிலேயே மண்குழிந்து

மூடிவிடும் பதட்டங்களைக் கொண்டிருந்தது பயணம். 


அஸ்தமனக் கரைகளில்

அத்தனை அவசரங்களில்லை

இனி குழி விழுங்கினும்

தீ தின்கினும் புகார்களில்லை

என்றான நிலையில் தான்

திரும்பிப் பார்க்க நேரமே வருகிறது. 


பாலைவனத் தெருக்களாய்

அனலடிக்கும் வெற்றுப் பாதையில்

ஏதோ ஒரு புள்ளியில்

பசுஞ்செடியில் ஒற்றைப்பூ பூத்திருக்கிறது. 

ஒற்றையிதழும் உதிர்ந்து விடாது 

நெஞ்சிலணைத்து ஓடினேனென்பதை

காலநதியின் கடைசிக் கரையில் நின்று

திரும்பிப் பார்க்கிறேன்.


உயிருக்கு நீர்வார்த்தல் பற்றி

உன் கண்களுக்கு யார் கற்றுக்கொடுத்திருக்கக் கூடும்.

இந்த மாந்தர்களுக்கு 

அந்த ரகசியத்தையேனும் சொல்லிவிடு.

No comments:

Post a Comment

#அன்றைய மெட்ராஸ்ராஜதானி,

  #அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் # தமிழ்நாடு 68* #நவம்பர்1 தமிழ்நாடு நாள் (பெற்ற -பிறந்த நாள்)உதயமான ந...