———————
கீழ்க்கண்ட ஒரு வரைபடங்களில் வந்தேறிகள் என சமூக ஊடகத் தளங்களில் நேற்று முதல் வெளி வருகிறது. அதைப் பதிவு செய்தவர்கள் மேல் குறை காண என்ன இருக்கிறது! தமிழ் சமூகத்திற்காக உழைத்த தமிழர்தம் வாழ்க்கைக்காகச் சிந்தித்த பலரையும் இந்த வரைபடம் வேதனைக்கு உட்படுத்துகிறது.
தமிழக உரிமைகளுக்காக வழக்கு மன்றம் சென்றவர்கள் எழுத்துப்பூர்வமாக பேசியவர்கள் வாதாடியவர்கள் பொதுநல வழக்குத் தொடுத்தவர்கள் போன்றவர்களுக்கு இச்செயல் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
இது முற்றிலும் அரசியல் சாசன சட்டத்திற்கு முரண் ஆனதும் விரோதமானதும் ஆகும் என்பதை யார் ஒருவரும் புரிந்து கொள்ள வேண்டும்! அந்த வகையில் இதைத் தெரியப்படுத்த வேண்டியது எனது கடமை!
தமிழ்நாட்டு மாவட்டங்களின் வரைபடத்தை இப்படியாகக் கொச்சைப்படுத்தி அந்த வரைபடத்தை திருத்தி அடையாளம் காட்டி வன்மங்களை உண்டாக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கதும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டியதும் ஆகிறது!
இதே வரைபடத்தை இவர்கள் கர்நாடகா ஆந்திரா, கேரளா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருக்கும் வந்தேறிகள் என குறித்து அடையாளம் இட்டு வகை அமைத்து அனுப்பி வைப்பார்களா? இல்லை! அனுப்பி வைக்கட்டுமே பார்க்கலாம்!.
#வந்தேறி
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-10-2024
Wednesday, November 20, 2024
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...


No comments:
Post a Comment