Wednesday, November 20, 2024

#TVK #Vijay #விஜய்

 மாற்று அரசியல் பேசி வருபவரையெல்லாம் உள்வாங்கிச் செரித்து..அல்லது உடன்வைத்து அழித்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்திருக்கின்றன திராவிடக் கட்சிகள்.


லஞ்சம்..ஊழல்..அதிகார மமதை..குடும்ப அரசியல்..என அனைத்தையும் நிறுவனமயப்படுத்தி வைத்திருக்கும்..அவர்களின் மீது இளம்தலைமுறை கடும் அதிருப்தியில் இருக்கிறது.


விஜயின் தவெக கட்சியின் விக்கிரவாண்டி மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் திரண்டு கொண்டிருக்கும் இளைஞர்படை திராவிடக் கட்சிகளுக்குச் சவாலாக இருக்கும் என்றே தோன்றுகிறது.


த. வெ. க. மாநாட்டிற்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து திகிலேற்படுகிறது. மூன்று மணிக்குமே ல  ஆரம்பிக்கப்போகிற நிகழுக்கு காலை ஆறு மணியிலிருந்து வர ஆரம்பித்து விட்டார்கள்

என்ன மக்கள்….. 

இதுதான் மக்கள் மன்றம்….

இது மக்கள் சமுத்திரம்…..

@actorvijay

 

@tvkvijayhq

 

#TVK 

#Vijay 

#விஜய்

#தமிழக வெற்றிக்கழகம்

#TVKVijay #TVKMaanadu #TVKMaanaaduOct27 #ThalapathyVijay #Thalapathy #தமிழகவெற்றிக்கழகம்




விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கென தமிழகத்தின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் விக்கிரவாண்டியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். 


மிகச் சிறப்பாக மாநாட்டு பந்தல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்பாட்டின் படி மாலை 6 மணிக்கு நடக்க  இருக்கும் மாநாட்டிற்கு காலை 6:00 மணி முதற்கொண்டே மக்கள் குவியத் தொடங்கி விட்டார்கள். ஊடகங்களில் இம் மாநாடு குறித்துப் பரபரப்பான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாடு முழுக்க இம்மாநாடு பேசுபொருளாக்கப்பட்டு இருக்கிறது 


 பந்தலின் பக்கவாட்டில் இருபுறமும் நாட்டுக்கு உழைத்த  தேசியத் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுடைய கட்டவுட் களும் மறுபுறம் அரசியல் தலைமையில் மிகச்சிறந்த ஆட்சிகளை மக்கள் நலன்களை அமைத்துக் கொடுத்த மூத்த பண்பட்ட அரசியல்வாதிகளின் கட்டவுட் களும் பாதுகாப்பு அரண் போல நிறுத்தி வைக்கப்பட்டிருக்க

அனைவரின் அரவணைப்போடும் அல்லது அவர்கள் எல்லோரையும் இணைத்துக் கொண்டுதான் தனது அரசியல் பிரவேசம் நிகழ இருக்கிறது  என்பது போல விஜய் இரு கைகளையும் நீட்டி தன் ரசிகர்களை வரவேற்கும் கட்டவுட்டும் நடுவில் நிற்கிறது! மூத்தோர் பாதையில் அறத்தின் அக்கினிக்குஞ்சு என்று சிலர் விஜய்யை வர்ணிக்கிறார்கள்.


சட்டம் நீதி போன்ற துறைகளில் மக்கள் பாதுகாப்பு முக்கியமானது அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்கிற முறையில் திரைப்படங்களை ஒரு இடதுசாரிப்பார்வையில் எடுத்து வந்த இயக்குனர் சந்திரசேகருக்கு மகனான விஜய்  கடந்த காலங்களில் 

தனது திரைப்படங்கள் மற்றும் பொது மேடைகளிலும் தனது கருத்துக்களை தீவிரமாகக் கூறி மக்கள் மனதில் அல்லது இளம் தலைமுறையினர் இடையே ஒரு வலுவான இடத்தை பிடித்திருக்கிறார்.! என்பது மட்டுமல்லாமல் இன்றைய ஆட்சியாளர்கள் அல்லது கடந்த 70 ஆண்டுகளாக முதிர்ந்து போன திராவிட ஆட்சிகளின் சுயநல லாப நோக்கங்களுக்கு  அதன் அனுப்பூட்டும் செயல்களுக்கு மாற்றாகவும் புதிய இளம் தலை முறையிரை அரசியல் படுத்தும் நோக்கிலும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது என்று நான் நினைக்கிறேன். 


மக்கள் மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப புதிய அரசியல் வடிவங்கள் தோன்றும் என்பது சனநாயக அம்சத்தில் நிகழ்ந்து வரும் வரலாறுதான். மட்டுமில்லாமல் இழந்து போன பல விழுமியங்களை புத்துயிர்ப்பு செய்வதற்கும் இத்தகைய புதிய நிலைப்பாடுகள் தேவைப்படுகின்றன. 


ஏற்கனவே இருப்பதை நீக்க வேண்டுமானால் மற்றொன்றை அதன் அருகில் உருவாக்க வேண்டும் 

என்கிற முறையில் விஜயின் அரசியல் பிரவேசம் நிச்சயம் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறியதைப் போல 

இன்றைய திமுகவிற்கு அருகிலேயே ஒரு மாற்று இயக்கத்தைக் கட்ட முயல்கிறார் விஜய்! 


எதிர்காலக் கூட்டணிகளை வலுவாக அமைப்பதன் மூலம் ஆட்சி மாற்றங்கள் ஏற்படலாம்.


அதற்கு விஜய் தகுதியானவர் தானா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கத்தான் வேண்டும்.


அவரது மாநாடு வெல்லட்டும்!

No comments:

Post a Comment

#அன்றைய மெட்ராஸ்ராஜதானி,

  #அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் # தமிழ்நாடு 68* #நவம்பர்1 தமிழ்நாடு நாள் (பெற்ற -பிறந்த நாள்)உதயமான ந...