Wednesday, November 20, 2024

நாமக்கல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசும்போது


 நாமக்கல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசும்போது நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை மிகுந்த பெருமையுடன்  தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகப்பேசி இருக்கிறார்.


அவருக்கு வேண்டுமானால் அந்த வெற்றி மகிழ்ச்சியாக இருக்கலாம்!அந்த வெற்றி எப்படி நடந்தது என்று தேர்தல் வல்லுனர்களுக்கு தெரியாதா?

காங்கிரஸுடன் இரண்டு இடது சாரிக் கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் 

மற்றும் சில பல கூட்டணிகளை வலிமையாக இணைத்துக்கொண்டு தான் அந்த வெற்றி சாத்தியமாயிற்று. போக எதிர்க்கட்சிகளிடம் பலமான கூட்டணி இல்லை.  அவைகள் மூன்று அணியாக பிரிந்து நின்றன.நிறுத்தப்பட்ட வேட்பாளர்களும் தொகுதியில் நிற்க வலுவற்றவர்கள்.


எல்லாவற்றுக்கு முத்தாய்ப்பாக ஒவ்வொரு தொகுதிக்கும் பல கோடி ரூபாய்கள் செலவழித்து ஓட்டுக்குப் பணம் கொடுத்து தான் அந்த  வெற்றியை பெற முடிந்தது என்பது வெள்ளிடைமலை . அதையெல்லாம் வசதியாக மறந்து விட்டு பயில்வான் போல திமுக தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று முஷ்டியைத் தட்ட கூடாது.


ஓட்டுக்கு பணம் கொடுத்து தான் அதை வாங்கினார்கள் என்பது உண்மையா? பொய்யா? மனச்சான்றுடன் பதில் அளிக்க வேண்டும்.


#DMKFails 

#ParliamentElection2024

#திமுக


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

23-10-2024


@actorvijay

 

@tvkvijayhq

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...