#செண்பகவல்லிஅணைசீர்அமைப்பு குறித்த விவசாயிகள் மாநாடு, 10-7-2025.
—————————————————————-
வருகின்ற ஜூலை பத்தாம் தேதி காலை 10 மணி அளவில் சங்கரன்கோயிலுக்கும் ராஜபாளையத்திற்கும் இடையில் உள்ள தென்மலையில் செண்பகவல்லி அணை சீரமைப்பு மற்றும் நீர் பாசன மாநாடு நடக்கவிருக்கிறது. அதில் சிறப்பு அழைப்பாளராக உரையாற்ற இருக்கிறேன். தென்மலையில் நடக்கும் இந்த விவசாயிகள் மாநாட்டில் செண்பகவல்லி அணையைச் சீரமைக்க வேண்டும்.
அது குறித்தான பணிகளை முன்னெடுக்கவும் அதை வலியுறுத்தி ஒரு போராட்டம் நடத்தவும் அப்பகுதி வாழ் விவசாயிகள் அனைவரும் கட்சி சார்பின்றி கூடிக் குரல் எழுப்பவும் திட்டமிட்டுள்ளோம். தென்மாவட்டங்கள் வளம் பெற #செண்பகவல்லிஅணைசீர்அமைப்பு, #அழகர்அணைதிட்டம், #அச்சங்கோவில்_பம்பை_சாத்தூர்வைப்பாறு_இணைப்பு குறித்து நான் எழுதிய சிறு கையேடு ஒன்றை அங்கே வெளியிட இருக்கின்றோம்.
திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி விருதுநகர் போன்ற ஐந்து தென்மாவட்ட விவசாயிகளும் இதில் பங்கேற்க வேண்டும். கடந்த காலங்களில் நதிநீர்த் தீரங்களை ஆட்சியாளர்கள் சரியாக கவனிக்கத் தவறி விட்டார்கள். அதேபோல தாமிரபரணி ஆறு கருமேனியாறு நம்பியாறு திட்டமானது இன்னும் தூத்துக்குடி சாத்தான்குளம் திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கு எட்டவில்லை. கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதுபோலவே பல்வேறு தென் மாவட்ட நீர் பாசனத் திட்டங்கள் யாவும் இதுவரை சரியாக நிறைவேறவில்லை.
வானம் பார்த்த கந்தகக் கரிசல் பூமிக்கு அதன் விவசாய வளங்களுக்கும் நலன்களுக்கும் தொடர்ந்து தேசிய நதிகள் இணைப்பு நான் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியது அனைவருக்கும் தெரியும். ஒரு 40 ஆண்டுகாலப் போராட்டத்தின் விளைவாக 2012ல் எனக்குத் தீர்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகும் காலகாலமாக கிடப்பில் போடப்பட்டு உள்ள இத்திட்டங்களை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து நாம் அனைவரும் உணர வேண்டும். ஆகவே இந்த மாநாட்டில் விவசாயப் பெருமக்கள் இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த மாநாட்டில் இதுவரை நடந்த அனைத்து முழு விவரங்களோடும் நான் உரையாற்ற இருக்கிறேன்.
மாநாடு நடக்குமிடம்.!
சங்கரன்கோயிலுக்கும் ராஜபாளையத்திற்கும் இடையே உள்ள கரி வலம்வந்த நல்லூர் அருகே உள்ள தென்மலை.
No comments:
Post a Comment