Saturday, March 21, 2026

jan 12

 #அன்றையபராசக்தியும் #இன்றையபராசக்தியும்!

——————————————————— இன்றைக்கு விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தித் திரைப்படமும் விவாத பொருளாக மாறியுள்ளது நான் ஒரு காலத்தில் 1983ல் இருந்து 1999 வரை சென்சார் போர்டில் உறுப்பினராக இருந்தவன். அப்போது ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் மிகப் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகியது. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறித்த கடுமையான விமர்சனமாக அப்படம் முன்வைக்கப்பட்டது. அதேபோல் தான் கமல்ஹாசனுடைய ஹேராம் படமும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இது மாதிரியான கலைகளுக்கு தடைகள் விதிக்க கூடாது என்று ஆதரித்து அதற்கு வாக்களித்து அப் படங்களை வெளியே கொண்டு வருவதற்கான ஆதரவை கொடுத்தவன் நான். அந்த வகையில் 20 ஆண்டுகால திரை படத் தணிக்கை துறையில் எனக்கு சில அனுபவங்கள் உண்டு. இப்படித்தான் கலைஞர் கதை வசனம் எழுதி கிருஷ்ணன் பஞ்சு இயக்கி சிவாஜி கணேசன் நடித்த பராசக்தித் திரைப்படம் அக்காலத்தில் தணிக்கைக்கு வந்தது. கலைவாணர் அரங்கத்தின் எதிர் பக்கத்தில் இருந்த பராகன் தியேட்டரில் தணிக்கை குழுவினர் முன் அப்படம் திரையிடப்பட்டது. உண்மையைச் சொன்னால் இரண்டு நாட்களாக அந்தத் தணிக்கை நடைபெற்றது.ஏராளமான காட்சி வெட்டுகள் வாதப்பிரதிவாதங்கள் என பல சிக்கல்களுடன் அத்தணிக்கை நடந்தது. அவ்வளவுக்கும் பிறகுதான் அன்றைக்கு சென்சார் அதிகாரியாக இருந்த மணிக்கொடி சீனிவாசன் அப்படத்திற்குச் சான்றிதழ் வழங்கினார். அந்த சமயத்தில் மத்தியில் காங்கிரஸ் அரசு நடத்திக் கொண்டிருந்தது. பண்டித நேரு பிரதமராக இருந்தார். இன்றைக்கு திமுகவுடன் இருக்கும் கூட்டணிக்காங்கிரஸ் அன்றைக்கு அந்த படத்திற்கு அனுமதி வழங்காமல் இரண்டு நாள் இழுத்தடித்தது என்பதுதான் வரலாறு.. அது ஒருபுறம் இருக்க இன்றைக்கு ஜனநாயகனுக்கும் பராசக்திக்கும்(cuts - வெட்டுகள்) தணிக்கை குழு சான்றிதழ் குறித்து…... இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு என்பது தன்னாட்சிச் சுதந்திரமும் உள்ளது. ஒருவேளை ஒரு திரைப்படத்திற்கு இந்தத் தென்னிந்தியத் தணிக்கை குழு அனுமதி வழங்காவிட்டால் அத் திரைப்படத்தை முமபைத் தணிக்கை குழுவிடம் சென்று காட்டி தான் அனுமதி வாங்க முடியும். அதுதான் முறை.அதை விட்டுவிட்டு இந்த திரைப்படங்களுக்கு மோடி அனுமதி வழங்கவில்லை அமித்ஷா அனுமதி வழங்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது பெரும் முட்டாள்தனம். இது முற்றிலும் சென்சார் தணிக்கை குழுவினரின் முடிவுக்கு உட்பட்டது. அந்தக் காலத்தில் குறிப்பிட்ட ஒரு பத்து பேர் தான் சென்சார் குழுவில் இருப்பார்கள் இப்பொழுது 100 பேருக்கு மேலாக மாநில பிராந்திய அளவில் சென்சார் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்கள். கன்னியாகுமரியில் வாழ்பவர் கூட இப்போது சென்சார் குழுவில் இருக்கிறார்.ஒரு காலத்தில் சென்னையில் இருப்பவர்கள் மட்டுமே இந்த சென்சார் குழுவில் இருக்க முடியும். உடனுக்குடனே அவர்களை அழைப்பார்கள்.வருவார்கள் தணிக்கைக் குழுவில் கலந்து கொள்வார்கள். அதுவும் குறிப்பாக ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தொலைபேசியில் அழைப்பார்கள் அவர்களும் வந்து கலந்து கொள்வார்கள். இப்பொழுது அப்படி அல்ல. எங்கிருந்து வேண்டுமானாலும் திருச்சியில் இருந்து கூட அவர்கள் வருகிறார்கள். மன்மோகன் சிங் காலத்திலிருந்து இந்த முறை வழக்கத்திற்கு வந்தது. ஒரு நூறு பேருக்கு மேல் சென்சார் குழுவில் இன்றளவில் இருக்கிறார்கள். ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற எந்தவிதமான அனுபவமோ அதற்குரிய பண்பு ஏதும் இல்லாதவர்கள் தான் இன்றைக்கு தணிக்கைக் குழுவில் இருக்கிறார்கள்.ஒரு திரைப்படத்தில் ஆபாசம் இன்னும் பல்வேறு காரணங்களுக்காக எந்த அளவுக்கு வெட்டுகள் கொடுக்கலாம் என்பது கூட அறியாதவர்கள்தான் இன்றைக்குத் திரைப்பட தணிக்கைக் குழுவில் இடம் பெற்று விடுகிறார்கள். திரைப்பட தணிக்கைக் குழுவில் இடம் பெற்றால் முதலில் சினிமாட்டோ கிராபி ஆக்ட் என்ன என்பதை முழுமையாகப் புரிந்து இருக்க வேண்டும். அதையெல்லாம் முற்றிலும் அறிந்தவர்களைத்தான் தணிக்கைக் குழுவில் அமர வைக்க வேண்டும். அதன் உண்மைத் தன்மைக்கு வேலை செய்வதை விட்டுவிட்டு மோடி கெடுத்தார் அவர் கொடுத்தார் இவர் கெடுத்தார் என்று சொல்வதில்எந்தவித அர்த்தமும் இல்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தெரியும்!எதையும் புரியாமலே இதற்கெல்லாம் காரணம் மோடி அது என்று உளறிக் கொண்டிருக்கிறார். உங்களுடைய திமுக காரர்களும் தான் அதில் உறுப்பினராக இருக்கிறார்கள். எதுவுமே புரியாமல் யாராவது எழுதிக் கொடுப்பதை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் எதைச் சொன்னாலும் ஆமாம் சாமி போடுவதற்கு ஒரு பெரும் கூட்டம் பத்திரிகை ஊடகம் எல்லாவற்றிலும் இருக்கிறது. உண்மையில் ஒரு பிரச்சனையின் ஆழமும் அறிவும் அவர்களுக்குத் தெரியாது.

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...