Wednesday, May 27, 2026

#இவர்கள்மனிதர்கள்அல்ல…..

 #இவர்கள்மனிதர்கள்அல்ல…..

——————————————— தங்கள் மகன்களை வாரிசு அரசியலில் வளர்த்து விட்ட தலைவர்கள் இன்றைக்குப் பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இதில் ஒரு சில மகன்கள் பெற்ற அப்பனையே கை நீட்டி அடித்து உட்கார வைக்கும் அளவிற்கு அதிகாரம் உள்ளவர்களாக மாறி இருக்கிறார்கள். இப்படியான சோதனையும் வேதனையும் அந்தத் தலைவர்களுக்கு வேண்டுமா? எத்தனை பேர் வாழ்வை கெடுத்து குட்டி சுவர் ஆக்கி நாசம் செய்த சதிகள் பலன் இன்றைய இந்த பாவிகளின் கையறு நிலை ! தாங்கள் செய்த பாவங்களுக்கு இமாதிரியான தண்டனைகளை அவர்கள் ஏற்க வேண்டியது கட்டாயம் போலிருக்கிறது . ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்பது தான் எவ்வளவு உண்மை?? ஆசையும் பாசமும் அரசியல் எதிர்காலமும் மக்களுக்கல்ல!அவர்களை எல்லாம் புறம் தள்ளி தங்கள் குடும்ப நலன்களை மட்டுமே பேணி வந்த இவர்களுக்கு இந்த அவமானங்கள் வந்து தான் சேரும். அரசியலில் பதவி என்பது தனது குடும்பத்தை வளர்த்துக் கொள்ளத்தான் என்கிற அளவில் குறுகிப் போய்விட்டார்கள்! முற்பகல் செயின் பிற்பகல் விளைகிறது!வேற என்ன சொல்ல? #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்



No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...