Wednesday, May 27, 2026

#லியாபாரஅரசியல்தேர்தல்சந்தை..

 #லியாபாரஅரசியல்தேர்தல்சந்தை..

—————————————————— கணிப்பின்படி இதுவரை தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே புரளாத பணம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெள்ளமெனப் பிரவாகம் எடுத்து விளையாடி இருக்கிறது! லியாபார அரசியல் தேர்தல் சந்தை….. பிரதான அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் பல்லாயிரம் கோடிகளை வாக்குக்கு வாரி இறைத்திருந்தாலும் அது கடைக்கோடி வரை முறையாகச் சென்று சேரவில்லை என்கிற பஞ்சாயத்து ஆளும் தரப்பில் இருந்துதான் அதிகம் வெடித்துக் கிளம்பி இருக்கிறது.! திமுக மூத்த நிர்வாகிகள் சிலர்,கவுன்சிலர் தேர்தல் தொடங்கி எம்பி தேர்தல் வரை அனைவருமே வாக்குக்கு பணம் கொடுப்பார்கள் . அது ஒவ்வொரு தேர்தலிலும் வழக்கம் தான் எனினும் தொகுதிக்குத் தொகுதி வேட்பாளர்கள் எதிர் வேட்பாளர்கள் கட்சி பலம் என பல காரணங்களால் அந்த முறையானது மாறுபடுகிறது!! ஆனால் இந்தத் தேர்தலைப் பொருத்தவரை ஒரு இடைத் தேர்தலில் இரண்டு கட்சிகள் எவ்வளவு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுமோ அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத அளவிற்கு பல தொகுதிகளில் அனைத்து உறுப்பினர்களும் வாரி பணத்தை இறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது! முன்பு நடந்த தேர்தல்களில் தொகுதிக்குத் தொகுதி ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகளை குறிவைத்து அங்கு மட்டுமே 300 500 என ரூபாய்கள் கொடுக்கப்படுவது வழக்கம்!! ஆனால் இந்த தேர்தலில் அத்தனை வியூகங்களும் முற்றிலுமாக மாறிவிட்டன! பல தொகுதிகளில் எங்களுக்கு இன்னும் பணம் வரவில்லை என்று மக்கள் போராடியதையும் வேட்பாளரைக் கூட்டம் கூட்டமாகத் தேடி வந்து எங்களுக்கு ஏன் நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்று கேட்டு வாங்கி சென்ற காட்சிகளையும் மாநில முழுவதும் பார்க்க முடிந்தது!! இதற்கு இருமுனைப் போட்டியாக இருந்த களத்தை விஜயின் வருகை மும்முனைப் போட்டியாக மாற்றியதே முக்கியக் காரணம் என்கிறார்கள்.! 2021 தேர்தலுக்கு முன்பாக 10 ஆண்டுகளாக திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லை! 2021 இல் ஆட்சிக்கு வந்தும் மேல் மட்டத்திலிருந்த சிலரைத் தாண்டி கீழ்மட்ட நிர்வாகிகள் யாருமே பணத்தைக் கண்ணில் கூடப் பார்க்கவில்லை என்று குறை சொன்னார்கள்!. டிரான்ஸ்போர்ட் டெண்டர் போன்ற கரன்சி பார்க்கும் வழிகளையும் மொத்தமாக அடைத்து விட்டதால் அதிலும் மாவட்ட செயலாளர்கள் கூட சம்பாதிக்க முடியாத நிலை நீடித்தது!!சொல்லப்போனால் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்குத் 2021 இல் தாங்கள் தேர்தல் செலவிற்கென வாங்கிய கடனைக் கூட இன்னும் கட்ட முடியாத அளவுக்கு தான் அவர்களின் நிலைமை இருந்திருக்கிறது. இதன் மூலம் கட்சித் தலைமை தங்களது வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்கிறோம் என்கிற பெயரில் 2026 தேர்தலில் பணம் ஏதும் வாங்கவில்லை!! அதே நேரம் செலவுக்குத் தொகுதி வாரியாக குறைந்தது 25 கோடி வரை கொடுத்து உதவியது!! அந்தத் தொகை பூத் கமிட்டி தொடங்கி வாக்காளர்கள் கவனிப்பு வரை அடக்கம்.! 234 தொகுதிகளுக்கும் சுமார் 68 ஆயிரம் பூத் கமிட்டிகள் உள்ளன.! தொகுதிக்கு 700 முதல் 800 வரை வாக்குச்சாவடிக் குழுக்களை திமுக அமைந்து இருக்கிறது! பூத்துக்கு 17 முதல் 30 பேர் வரை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்!!ஒன்றிய நகரப் பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவருக்குமே அவர்களின் பதவிகளுக்கு ஏற்ப 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொடுக்கப்பட்டிருக்கிறது!! அப்படியிருந்தும் வாக்குகளுக்காக பூத் கமிட்டி மூலம் கொடுக்கப்பட்ட பணத்தில் ஆயிரம் கொடுக்கச் சொன்ன இடத்தில் 500 ரூபாயும் ஆயிரம் பேருக்குக் கொடுக்க பணத்தில் 500 ல் இருந்து 700 பேருக்கு மட்டுமே கொடுத்துவிட்டு மிச்ச பணத்தை அமுக்கி கொண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.!குறிப்பாகத் தென் மாவட்டங்களில் பரவலாக இந்தப் பட்டுவாடா முறையாகச்சென்று சேரவில்லை! அதிலும் கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் புதிய வேட்பாளர்களைக் களமிறங்கிய தொகுதிகளில் 60 முதல் 70 சதவீத அளவு பணமாவது வாக்காளர்களின் கைக்குப் போயிருந்தாலே பெரிய விஷயம்! இதற்கு இன்னொரு முக்கியக் காரணம் இருக்கிறது!கடந்த இரண்டு வருடம் மண்டல வாரியாக மாநாடு, ஓரணியில் தமிழ்நாடு, ஒன்றிணைவோம் வா, உங்களுடன் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சிகளின் மேல் நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகளைச் சக்கையாகப் பிழிந்து விட்டார்கள்! அவை அனைத்துக்குமான செலவை அந்த மாவட்டச் செயலாளரும் மற்றும் கீழே இருந்த நிர்வாகிகளே ஏற்றுக் கொண்டார்கள். பின்னாளில் ஏதாவது கிடைக்கும் என்கிற அவர்களது நம்பிக்கை ஒரு பக்கம்! இப்படிச் செலவுக்கு மேல் செலவு செய்து சோர்ந்து கிடந்த நிர்வாகிகள் பலரும் பணத்தை பார்த்ததும் பேரளவில் அமுக்கிவிட்டார்கள் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இவ்வளவுக்குப் பின்பும் ஓட்டிற்கு பணம் கொடுப்பது தவறு என்று இந்த மொத்த அமைப்பில் யாருமே சொல்லவில்லை. இதற்கு மேல் யார் வெற்றி பெறுவார்கள் என்று பந்தயத்தில் ரூபாய் கோடி கணக்கில்1/2

No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...