#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.
#ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில் நடத்தாமல் ஜெயலலிதா அதிமுகவை எப்படி வழி நடத்தினாரோ அதே பாணியில் வழிநடத்த ஆரம்பித்து விட்டார். அது மட்டுமல்ல அவருக்கு இலங்கை ஈழத் தமிழர் பிரச்சினைகளோ தமிழ்நாட்டின் நதிநீர் தாவாக்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றி எதுவுமே தெரியாது. கோழி விரட்டினால் கூட பயந்து கொண்டு வீட்டுக்குள் ஓடும் குழந்தைதான் ஸ்டாலின்! எப்படியாவது பணம் கொடுத்தால் ஓட்டு வாங்கி ஆட்சி அமைத்து விடலாம் என்பது தான் அவரது அபத்தமான நம்பிக்கையாக இருந்தது. இதற்குச் சில பத்திரிகையாளர்கள் சில ஊடகங்கள் இந்து பத்திரிகை ராம் போன்றவர்கள் அவருக்கு பல்வேறு வழிகளில் முட்டுக் கொடுத்தார்கள்! திருநெல்வேலி மாவட்டம் அம்பை அரியநாயகபுரம் வாத்தியார் மகன் சபரீசன் இவருக்கு மருமகன் ஆனார்! ஏறத்தாழ அவர் ஸ்டாலின் வீட்டுக்குள் வந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் இப்பொழுது அவரது கையில் ஸ்டாலின் மாட்டிக் கொண்டு விட்டார். அந்த வகையில் சபரீசன் மாமனாரை கைக்குள் போட்டுக் கொண்டு நான்தான் திமுகவின் தொழில்நுட்ப மற்றும் ஐடி விங்கின் பொறுப்பாளர் என்று கூறிக்கொண்டு அதன் வெற்றி முகத்தை நானே நிர்வகிப்பேன் என்று அவர் கலைஞர் காலத்திலேயே ஆணவமாகச் சொன்ன போது கலைஞருக்கு அது முற்றிலும் பிடிக்கவில்லை! இது குறித்துக் கலைஞர் என்னிடம் நேர்ப்படவே சபரீசன் உடைய இந்த ஊடுருவல் சரியாக வரவில்லை உங்களைப் போன்ற ஆட்கள் தானே ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும் இது எனக்கு சரியாகத் தோன்றவில்லை என்று சொன்னார்.! அதை யாரும் அங்கு கவனமாகவோ விமர்சனமாகவோ எடுத்துக் கொள்ளவில்லை! ஆகவே இதனால் கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டாலினிக்கும் அவரது குடும்பத்திற்கும் குறிப்பாக அவரது மனைவிக்கும் என்னைப் பிடிப்பதில்லை! என்றாலும் கலைஞர் ஒரு தலைவர் என்ற முறையில் அவரை நம்பித்தான் அங்கு நான் நீடித்தேன். அந்த நிலையில் கலைஞரின் மகனை விட குறிப்பாக ஸ்டாலினை விட அதிமுகவிலிருந்து வருபவர்கள் தான் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்கிற முறையில் சபரீசன் அவர்களைச் சரமாரியாக கட்சிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்குமாறு நிர்பந்தித்தார்! அதன்படி கே கே எஸ் எஸ் ஆரில் இருந்து எ வ வேலு செந்தில் பாலாஜி சேகர் பாபு வரை திமுகவிற்குள் கொண்டு வந்து அவர்கள் அனைவரையும் தன்வசம் ஆக்கிக் கொண்டார்! அப்பொழுதுதான் திமுகவின் நிறமே மாறியது! இதே மருமகன் சபரீசன் வியூகம் வகுத்திருந்தால் 2011, 2016ல் திமுக ஏன்தோற்றது? மருமகன் தான் எல்லா இடங்களிலும் பணம் கொடுத்தார் ஓட்டை வாங்க முயற்சி செய்தார். எல்லாரையும் இழுத்துப் போட்டுக் கொண்டார்! அவர் தான் சட்டாம் பிள்ளையாக இருந்து தேர்தல் வேலைகளைச் செய்தார்! அப்படி இருந்தும் ஏன் திமுக தோற்றது? தென் மாவட்டங்கள் அந்த மாவட்டம் இந்த மாவட்டங்களில் சூறாவளிச் சுற்றுப்பயணம் கூடச் செய்தார்!! கனிமொழியின் தொகுதி வரை சென்று தன் தேர்தல் வேலைகளைக் காட்டினார்! திமுகவில் இருந்த எல்லோரும் திமுகவிற்குள் வந்த தெய்வத்தைப் போல அவரை அனுசரித்துக் கொண்டும் அவர் சொல்லைக் கேட்டுக் கொண்டும் செயல்பட்டார்கள். அத்தனைச் சீரழிவுகளோடும் ஏதும் அறியாத ஸ்டாலின் முழு நிர்வாகத்தையும் அவரிடம் ஒப்படைத்தார்! தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புகளை வழங்கவதும் , இதற்காக செலவு கட்சி பணம் வழங்குவதும் சபரீசன்தான். இவரை சுற்றி திமுக என சூழல் அஅமைத்துள்ளது ஆட்சி அதிகாரம் காலத்தில் சபரீசன் எங்கும் ஆக்கிரமித்து இருப்பார். இதையும் ஸ்டாலின் குடும்பம் ரசிக்கும். ஸடாலின் மகனோ ஒரு விளையாட்டு பிள்ளை! அவர் இது எதையும் கணக்கில் எடுக்க மாட்டார்! இன்றைய தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஸ்டாலின் குடும்பத்தில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதுதான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது! இந்த நேரத்தில் ஈழ பிரச்சனைகளோ அதில் திமுகவின் நிலைப்பாடுகளையும் வழிநடத்தி அறிவுறுத்திச் சென்ற எங்களைப் போன்றவர்களை இடமில்லாமல் வெளியே நிறுத்தியதை சபரீசன் தனக்குச் சாதகமாக செய்து கொண்ட மோசடிகள் என்றே நான் குறிப்பிடுவேன்!. அதன் அடிப்படையில்தான் என்னை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று எந்த ஒரு வாய்ப்பைம் தராமல் ஒதுக்கி வைத்தார்கள்!. என் அரசியல் வாழ்வை நாசம் செய்தார்கள். அதற்கான பழிபாவந்தான் இன்றைய திமுகவுக்கு நேர்ந்த பின்னடைவு! நீங்கள் செய்த பாவங்களுக்கு துரோகங்களுக்கு காலத்தில் விலை கொடுக்கிறீர்கள்! இதில் எனக்கு என்ன வந்தது!? இப்படி நான் சொல்லுவது ஆதங்கம் அல்ல அரசியல் அவலம் இப்படியாகத் திமுகவிற்கு நேர்ந்து விட்ட அவலத்தின் பாற்பட்டது தான்! கலைஞரே என்னிடம் ஒருமுறை நேரில் சொன்னார்! என்னையா! உன்னைக் கண்டாலே ஸ்டாலினுக்கு பிடிக்க மாட்டேன் என்கிறது1/2
Subscribe to:
Post Comments (Atom)
#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.
#திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment