Wednesday, May 27, 2026

#காங்கிரஸ்கொடுத்தவலிகள் …

 #காங்கிரஸ்கொடுத்தவலிகள்

அன்று கம்யூனிஸ்ட்கள…. இன்று இவர்கள் கூட்டணி ——————————————————- 1976-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது, கேரளாவில் உள்ள கோழிக்கோடு பிராந்திய பொறியியல் கல்லூரியில் (இன்றைய என்ஐடி, கோழிக்கோடு) படித்துக்கொண்டிருந்த ராஜன், காவல்துறை மூலம் கைது செய்யப்பட்டார். நக்ஸல் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ராஜன், காக்காயம் காவல் முகாமில் வைத்து காவல்துறையினரால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஆனால், அவரது உடல் ஒருபோதும் மீட்கப்படவில்லை. தன் மகனின் கைது, சித்திரவதை மற்றும் மரணம் குறித்து ஈச்சர வாரியர் பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டார். அன்றைய கேரள முதலமைச்சர் கே. கருணாகரனையும் சந்தித்து மன்றாடினார். ஆனால், எவரிடமிருந்தும் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை. சிலர் உண்மையைக் கூறாமல் மறைத்தனர். வாரியரின் மனைவி, மனநலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார். ஆனால், தன் மகனுக்கு நீதி தேடும் முயற்சியை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. தன் வாழ்நாள் முழுவதும், மகன் காணாமல் போனதற்கும், நீதியின் தோல்விக்கும் பதில்களைத் தேடினார். இது, ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் இழப்பு பற்றிய கதை மட்டுமல்ல, ஒரு தந்தையின் தனிப்பட்ட வேதனை, அரசின் அடக்குமுறை, நீதித்துறை தோல்வி போன்றவற்றை விவரிக்கும் ஒரு ஆவணம். இந்த நூல், மனித உரிமை மீறல்கள், விசாரணை அதிகாரிகளின் கொடுமைகள் மற்றும் நீதி அமைப்பின் தோல்வி ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு சக்திவாய்ந்த சாட்சியாக மாறியது. #memoriesofafather #tveacharavarier



No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...