உங்களைப் போன்ற நல்லவர்கள் அவனுக்குப் பின்னணியில் இருந்தால்தானே நல்லது! என்று ஆழ்ந்த பொறுப்புடன் சொன்னார். ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் பலவிதமாக அவர்களுக்கு நேர்ந்த சிக்கல்களில் வழக்குகளில் ஈடுபட்டு நான் தீர்த்துக் கொடுத்த போதும் கூட அவர்களின் அந்தரங்கங்கள் சங்கடங்கள் எனக்குத் தெரிந்து விட்டது என்பதற்காகவே என்னைப் புறக்கணித்தார்கள்!!
அப்படியெல்லாம் செய்த பிறகு அவர்களுக்கு என்னை ஒரு பொருட்டாக இன்று வரை கருத முடியவில்லை என்றான பிறகு நான் எதற்கு அவர்களைக் கருத வேண்டும்! இன்னா செய்தாரை ஒறுத்தல் போன்ற குறள்கள் அவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் போல!! #திமுக #DMK #திமுககுடும்பஅரசியல் #DMKdyanastpoltics #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
No comments:
Post a Comment