Wednesday, May 27, 2026

#கருத்துக்கணிப்புகள்(#தினிப்புகள்)

 #கருத்துக்கணிப்புகள்(#தினிப்புகள்)

••• டிவி சேனல்கள் ஓடி ஓடி வெளியிடுகிறார்கள்... ஏன்?* என்ட குருவாயூரப்பா... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், அவரவர் தேர்தலுக்கு முன் வாங்கிய... அடிப்படையில் வெளியாகிவிட்டது. தேர்தலுக்கு முன்னாலும் இஷ்டம் போல் ஆளுக்கு ஒரு கணக்கை சொன்னார்கள்; ஆனாலும் திமுகவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஏராளமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அதையெல்லாம் முறியடித்து குருவாயூரப்பன் திமுக பக்கமே சாய்ந்திருக்கிறார். இந்த கருத்துக் கணிப்புகளை பார்க்கும் போதே சொல்லிவிடலாம். ஏராளமான விட்டமின் "ப" கருத்துக்கணிப்புகளுக்கு பரிமாறப்பட்டிருக்கிறது என்று... எப்படியோ எல்லாரையும் குழப்பி விட்டார்கள். 2016 தேர்தலிலும் இப்படித்தான் திமுக வரும் என்று அடித்துச் சொன்னது கருத்துக்கணிப்பு. ஆனால் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். கருத்துக் கணிப்பு என்பது டிவி சேனல்களுக்கு விளம்பர வருமானத்தை தரக்கூடியது. அதனால் தான் ஓடி ஓடி இவற்றை வெளியிடுகிறார்கள். இதில் இன்னொரு விஷயம்: கருத்துக்கணிப்பு எடுத்த அத்தனை நிறுவனங்களும் தமிழ்நாட்டைப் பற்றி அதிகம் அறியாதவர்கள். வடக்கில் உள்ள நிறுவனங்கள்தான் இந்த கருத்துக்கணிப்புகளை தந்துள்ளன. இதை ஒப்புக் கொள்வது கடினமாக இருக்கிறது. கருத்துக் கணிப்பை ஒழித்துக் கட்ட சட்டத்தில் இடமில்லை . சட்டங்கள் தேவை.தேர்தல் முடிந்து போனது. வாக்கு எண்ணிக்கைக்கு தேதி நிர்ணயம் உள்ளது . இதற்கிடையில் இந்த கணிப்பு ஏன்? இதை வைத்து என்னதான் செய்யப் போகிறார்கள்? இதில் நாட்டு நலன் என்ன? பயன்தான் என்ன? இதில் பணமாக்கத் துடிக்கும் ஒரு கூட்டத்திடமிருந்து மக்கள் தப்பவே முடியாதா? இதையும் மீறி, குருவி உட்கார பனம்பழம் யார் கையிலாவது விழுந்தால், அவரே வெற்றி பெற்றவராக கருதப்படுவார். என்ட குருவாயூரப்பா! கருத்துக்கணிப்புகளின் படி, கிரீடம் சூட்டியவருக்கு கிரீடம் தருவாயா என்பது உனக்கு மட்டும்தான் வெளிச்சமப்பா. #கருத்துக்கணிப்பு #ExitPoll

No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...