Wednesday, May 27, 2026

போட்டியிட்ட காலத்தில் முதல நாள் காலை 8 மணியளவில்

 போட்டியிட்ட காலத்தில் முதல நாள் காலை 8 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி மறுநாள் நாள் காலை முடிவை சொல்ல 8-9 மணி வரை காத்திருந்தேன். அன்று ஒரு நேர்மை இருந்தது.

கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர் அவர் யாராக இருந்தாலும் பணம் கொடுத்தால் அவருக்கு ஓட்டு போட வாக்காளர்கள் தயாராக உள்ளனர் என்பதை இனிச் சீர்திருத்த முடியுமா? என்று தெரியவில்லை! இது ஒரு மாபெரும் அவலம்!! கடைசியில் கட்சி அதன் வாக்குறுதிகள் இவற்றை எல்லாம் விட ஓட்டு போடத் தரப்படும் பணமே தேர்தலில் முக்கியத்துவம் பெறுகிறது! இனி ஒரு விதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை! என்னைப் பொறுத்தவரையில் இவற்றிலெல்லாம்தான் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.! ஒரு சமூகம் பாழ் பட்டுக் கிடக்கும் போது நல்ல அரசியலார்கள,சட்டம் நீதி சார்ந்த அறிவுஜீவிகள், மக்கள் ஒன்று சேர்ந்து இதைச் சரிப்படுத்த வேண்டும்! செய்ய வேண்டிய காலம் வந்திருக்கிறது!




No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...