Wednesday, May 27, 2026

#ரோஜாமுத்தையாநூலகத்தில்…..

 #ரோஜாமுத்தையாநூலகத்தில்…..

#புதுமைப்பித்தனுக்குசிறப்பு ———————————————— திருநெல்வேலியில் பிறந்த புதுமைப்பித்தனின் 120 வது பிறந்தநாள் ஆண்டு நினைவை ஒட்டி ரோஜா முத்தையா நூலகத்தில் புதுமைப்பித்தன் சார்ந்த கண்காட்சி நடக்கின்றது. அங்கே அழைப்பின் பேரில் இன்று (26-4-2026)காலை சென்று கலந்து கொண்டேன். ஓவியர் மருது அவர்கள் புதுமைப்பித்தன் பற்றிய அவரது கதைகள் குறித்த ஓவியங்களை வரைந்து வைத்திருந்ததைப் பார்த்தேன். மிகச் சிறப்பான முயற்சி அவருக்கு வாழ்த்துக்கள்! புதுமைப்பித்தனின் 29 சிறுகதைகள் அவரது தொடக்க காலமான 1940ல் அச்சில் கண்ட அபூர்வங்களுக்குப் பிறகு அதை ரோஜா முத்தையா மன்றம் இந்த 2026ல் மறு பதிப்பாக மிகச் சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கிறது! அந்த நூலையும் பெற்றுக் கொண்டேன்! புதுமை பித்தன் தன் காலத்து மனிதர்களைப் புரிந்து கொண்ட மிகச்சிறப்பான சிறுகதைகளை எழுதி மனிதர்களின் வேதனையை எதார்த்தத்தை நகைச்சுவையாக மாற்றித் தந்தார்!ஒவ்வொரு மனிதர்களின் சுயத்தையும் அவரது கதைகளை வாசிப்பதன் மூலம் அவர்களே அவர்களைத் தன்னில் தன்னடையாளம் காணச் செய்தார்! இன்றளவும் அந்த பொருனை மண்ணின் மிகச்சிறந்த படைப்பாளியாகவும் இதுவரை யார் ஒருவரும் எழுதிவந்த கதைகளுக்கும் அப்பால் இன்றும் நினைவு கூறப்படுகிறார் எனில் புதுமைப்பித்தன் ஒரு மகா பெரிய ஞானவான் என்பதில் ஐயமில்லை! இந்த நாளில் மறுவாசிப்பு என்றாலும் கூட அவரது கதைகளைப் படிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! என்னை பொறுத்தவரையில் ஆங்கில வாசிப்பு இருந்தாலும் தமிழில் பாரதி புதுமைப்பித்தன் கி ராஜநாராயணன் போன்றோரின் இலக்கியங்களுக்கும் எழுத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவன். நல்லதொரு நிகழ்வில் பங்கு பெற்று வந்தது குறித்து மகிழ்வாய் இருக்கிறேன். #ksrpost #KSR #கேஎஸ்ஆர்போஸ்ட்






No comments:

Post a Comment

#திமுகதோல்விகளும் சில உண்மைகளும்.

  #திமுகதோல்விகளும் சில உண்மைகளும். #ஆதங்கம்அல்லஅரசியல் அவலம்…. ——————————————————— ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுகவைக் கலைஞரின் பாணியில...