இன்றைக்குத் தேர்தல்களும் கட்சிகளின் வாக்குறுதிகளும் பிரிக்க முடியாத சம்பிரதாயங்களாகி விட்டன. பெரிய கட்சிகள் எதுவாக இருந்தாலும் வாக்குறுதிச் சமுதாயத்தை அவை மீறுவதில்லை”! சுயேட்சையாக அரசியல் பலம் இல்லாமல் நிற்கும் வேட்பாளர்களும் கூட வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.!
திமுக அதிமுக போன்ற பெரிய கட்சிகளின் வாக்குறுதிப் பட்டியல்கள் மிக நீண்டவை! தேர்தலுக்குத் தேர்தல் இந்த இரண்டு கட்சிகளும் நீண்ட வாக்குறுதிப் பட்டியலைத் தொடர்ந்து வெளியிடுகின்றன! ஆட்சியைப் பிடித்த கட்சி தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவில் வைத்து அதை மனசாட்சியாக நிறைவேற்றுவதில்லை! காரணம் அவற்றை நிறைவேற்றும் அளவிற்கு அரசின் பொருளாதாரப் பின்னணி இல்லை! வேண்டுமென்றே பொய் வாக்குறுதிகளளைக் கொடுத்து மக்களை கவர்ந்து ஓட்டுகளை வாங்க எண்ணுகிறார்கள்! இது சாலையில் மூணு சீட்டுக்காரன் படம் காண்பித்து மக்களை ஏமாற்றுகிற வேலை தான்!! மக்களும் ஆட்சிக்கு வந்த கட்சி எத்தனை வாக்குறுதிகளை அளித்தது! அவர்கள் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்பதை பற்றி எல்லாம் கவலைப்படுவதும் இல்லை!! கடந்த சட்டமன்ற தேர்தல் 2021 இல் நடந்தது! அப்போது திமுக கழகம் 505 வாக்குறுதிகளை கொடுத்ததாகக் கூறுகின்றனர்! இது அனைவருக்கும் தெரியும்!இந்த 505 வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை ஸடாலினும் அவரது திமுக அரசும் நிறைவேற்றியது என்பதைக் கணக்கெடுத்தால் தலை சுற்றும்! உள்ளி உள்ளிக் கோமாளி அதை அதையே காட்டினானாம்! ஆனால் அதைப் பற்றி எல்லாம் ஸ்டாலின் கவலைப்படாமல் 2026 தேர்தலிலும் ஏகப்பட்ட அதே மாதிரியான வாக்குகளை மக்கள் முன்பு அவிழ்த்துவிட்டுள்ளார்! அவர் நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியல் நீண்ட நெடியது! கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளில் நிறைவேறாத வாக்குகளின் பட்டியலைக் காணும் போது எவ்வளவு ஏமாற்றமாக இருக்கிறது! சட்டசபை நிகழ்ச்சிகளை டிவியில் ஒளிபரப்புவோம் என்ற வாக்குறுதியை ஸ்டாலினே மறந்து போயிருப்பார் போல!! சமையல் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததை ஸ்டாலினோடு சேர்ந்து வாக்காளர் ஆகிய பொதுமக்களும் நாமும் அறவே மறந்து போய்விட்டோம்! மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறையை அமுல்படுத்துவோம் என்றார் ஸ்டாலின்!! இது தவிர ரேஷன் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும்! உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்! பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்! அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் ஆக்கப்படும்! பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைக் களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்!என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தார் அந்த வாக்குறுதி மன்னர்! கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் ஆக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தையும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.! ஏற்கனவே அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன! இவை போதாது என்று ஸ்டாலினும் தன் பங்குக்கு முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என்றார்! ஒரு இடத்தில் கூட கலைஞர் உணவகம் அமைக்கப்படவில்லை! சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் அரசுப் பணியாளர்களாக ஆக்கப்பட்டு அவர்களுக்குக்காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் ஒட்டுமொத்த ஓட்டுகளைக் கவர்வதற்காக சொல்லப்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் அதை ஸ்டாலினும் மறந்து விட்டார் மக்களும் மறந்து விட்டனர்! அரசுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியில் உள்ள அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றார்! ஆனால் சத்துணவு பணியாளர்களும் தற்காலிக பணியாளர்களும் கூட தங்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாகக் கூறிப் போராடியது தான் கடைசியில் நடந்தது!! அவர்களுக்காகக் கொடுத்த வாக்குறுதி அவர்களின் ஓட்டுகளை வாங்கத்தானே அன்றி நிறைவேற்றுவதற்குத் துப்பு வேண்டுமே!!இவற்றையெல்லாம் அமுல்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன மனம் பேதலித்தா இருக்கிறது? மாணவர்களையும் இளைஞர்களையும் கவர கடந்த சட்டமன்றத் தேர்தலில் இப்படி ஒரு வாக்குறுதியை ஸ்டாலின் வழங்கினார்!! 30 வயதுக்கு உட்பட்ட தமிழக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார்! நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் பட்டியலில் அதுவும் சேர்ந்தது தான் சோகம்! வேறொன்றும் நடக்கவில்லை பெற்றோர்களின் வாக்குகளைக் கவர பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பால் வழங்கப்படும் என்றார் ஸ்டாலின். ஏன் என் மகனுக்குப் பால் தரவில்லை என்று பெற்றோர்கள் க்யு வரிசையாக ஸ்டாலின் வீட்டு முன்னால் நிற்கவா…2
No comments:
Post a Comment