Friday, June 5, 2015

எதார்த்தம்

தகுதிகளுக்குத் தடைகள்,
பகட்டுகளுக்குப் பாராட்டுகள்
போலிகளுக்குப் போற்றுதல்கள்

பொய் உதட்டு மொழிகளுக்கு பொற்கிழிகள்
உண்மைகளுக்கு உதாசீனங்கள்
பண்பற்ற கேடுகெட்டவர்களுக்கு பல்லாண்டு புகழ்ச்சிகள்

பெற்ற நன்மைகளுக்கும் நன்றிபாராட்டுவதில்லை...
தன்னலமற்ற உழைப்புகள் ஊனமாகிறது.
இப்படியிருந்தால் நாடு எங்கே போகும்..???

மக்களே மகேசன்கள், அவர்களே எஜமானர்கள் என்ற நிலையில்
இவற்றையெல்லாம் திருத்தினால் தானே  இறையாண்மை மக்களிடம் நிலைக்கும். இதை மக்கள் உணராமல் இருந்தால் மக்களாட்சி எப்படி நடக்கும்.

உழைப்பும் தகுதியும் எந்தப் பதவிக்கும் தேவையில்லை என்ற நிலை வந்தபோது, நமக்கென்ன என்ற சிந்தனை நல்லவர்களிடம் பரவலாக இன்றைக்கு வந்துவிட்டது. இப்படித்தான் கீழ்மட்ட நிர்வாகத்திலிருந்து, நாட்டின் பரிபாலனங்கள் வரை இன்றைக்குள்ள எதார்த்த நிலை.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-06-2015.

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...