Monday, December 28, 2015

புரோட்டா பிரியர்களுக்கு கவனத்திற்கு

விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாக இறந்தவர்களின் வயது 33/31/34/35/37/39/41/43/46.

இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர். தயவு செய்து யாரும் புரோட்டாவும் முட்டையும் அதிக அளவில் தினமும் உட்கொள்ள வேண்டாம்...

கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிட்ட எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்.

திங்கள் அன்று இறந்தவர் வயது 37 (மாரடைப்பு/) தினமும் புரோட்டாவும் /சென்னை சென்றால் பீசா பர்க்கரும் சாப்பிடும் பழக்கமுடையவர். தேவையற்ற உணவு பழக்கத்தை கை விடுங்கள்.

புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!

புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு, புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.

இதில்தான் எத்தனை வகைகள்? விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது.
ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.
புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய மைதாவால் செய்யப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால் மைதா மாவினால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.

மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.
ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் ‘பெண்சாயில் பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.

இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல் கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான் அதிகம்.

உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.

கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். பாலக்காடு மாவட்டம் முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும் அங்கு பிரச்சாரம் தொடர்கிறது.
இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, சோளம் உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்த புரோட்டாவை புறம் தள்ளுவோம். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்...

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...