Friday, April 22, 2016

ஏன் ஜெயா மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது ?

1991-ம் ஆண்டு, முதல் வாய்ப்பாக வாய்த்தது முதலமைச்சர் நாற்காலி. அதிகாரத்துக்கு முதல்முறை வருபவர்களுக்கே இருக்கும் இயல்பான குணத்தால் அதை அனுபவித்தாரே தவிர, சாதனைகள் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டமன்ற மகுடத்தை, அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்தார்கள். சட்ட மன்றத்துக்குள் தோழி சசிகலாவை அழைத்துச் சென்றதில் இருந்து சரிவு தொடங்கியது. அந்த மன்றத்துக்குள் சபாநாயகர் ஆசனம் என்பது முதலமைச்சருக்கு எல்லாம் மூத்தது. அதில் தானே உட்கார்ந்து, தன் அருகில் சசிகலாவை உட்காரவைத்து, சபையின் நாயகனையே தனது காலில் விழவைத்து, முதல் கோணல் முற்றிலும் கோணலாகத் தொடங்கிய ஆட்சி அது.

போயஸ் கார்டனில் இருந்து கோட்டைக்குக் கிளம்புகிறார் என்றால், முக்கால் மணி நேரத்துக்கு முன்னரே வாகனங்களை நிறுத்தி, ஓட்டுபோட்ட மக்களை வெயிலில் வறுத்தெடுத்தார்கள். 

செத்த பிணத்தை எரிக்கும் வசதிக்கான சுடுகாட்டு மேற்கூரை போடுவதில் தொடங்கி, பள்ளி மாணவர்களுக்கு செருப்பு வழங்குவது வரை... எல்லாவற்றிலும் ஊழல், ஊழல், ஊழலோ ஊழல்!

அராஜகம், சர்வசாதாரணம். கவர்னர் சென்னாரெட்டியே திண்டிவனத்தில் திணறிப் போனார். திருச்சி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கப்பட்டார். 

டி.என்.சேஷனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவும் முடியவில்லை; தங்கியிருந்த விடுதிக்குள் போகவும் முடியவில்லை. வழக்குரைஞர் சண்முகசுந்தரம் வெட்டப்பட்டார். வழக்குரைஞர் விஜயன் மீது தாக்குதல். முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா எதற்காகவோ தாக்கப்பட்டார். சந்திரலேகா மீது ஆசிட் வீசியது அராஜகத்தின் உச்சம். சுப்பிரமணியன் சுவாமிக்கு நடந்தது அசிங்கத்தின் உச்சம். தமிழ்நாட்டு அரசியலில் மாறாத வடுக்களாக இவை மாறின.

சசிகலாவின் அக்கா மகன் வி.என்.சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இந்தியாவே பிரமிக்கத்தக்க திருமணத்தை நடத்தினார். இன்று அது குறித்த உச்ச நீதிமன்ற விசாரணையும் இந்தியாவே பிரமிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டிருக்கிறது.

இவர் மீதும் இவரது சகாக்கள் மீதும் 40-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் பாய்ச்சப்பட்டு, மூன்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஜெயலலிதாவே கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் 28 நாட்கள் வைக்கப்பட்டார்.

Vikatan

No comments:

Post a Comment

Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no mat...