Wednesday, April 20, 2016

எனது இலட்சியக் கனவு!                  தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ இலட்சியத்திற்கான வீரம் செறிந்த போராட்டக்களத்தில் முதல் வித்தாகிப் போனவன் மாவீரன் சங்கர்.அவனோடு பழகிய,வாழ்ந்த அந்த நாட்கள் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகின்றது.அவனது வரலாற்றினை குறுந்திரைப்படமாக கொண்டுவர வேண்டுமென்ற பேராவல் என் நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து கொண்டே இருந்தது.இவ்வாண்டு மாவீரச் செல்வங்களின் நினைவு நாளன்று அந்தப் பணியை நிறைவேற்றிவிட முடியும் என நம்புகின்றேன்.              தென்னிந்திய தமிழ்த் திரையுலகில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி எந்தவித புரிந்துணர்வும் இல்லாத ஈனப்பிறவிகள் சிலர் இயக்கத்தையும்,தேசியத்தலைவரையும் கொச்சைப்படுத்தும் விதமாக படங்களைத் தயாரித்து வெளியிட்டபோது எனது நெஞ்சத்தில் பெரு நெருப்பொன்று மூண்டது.அதன் தீச்சுவாலையாக "பாசறைப் பட்டறை"யின் முதல் வெளியீடாக 'மீண்டும் வருவோம்' குறும்படத்தினை நமது உறவுகளின் துணையோடு வெளிக்கொணர்ந்தோம்.அதற்கு உலகெங்கும் இருந்து கிடைத்த வரவேற்பானது தொடர்ந்து அந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற உந்துதலை நமக்கு ஏற்படுத்தியுள்ளது.அதன் வெளிப்பாடாக பாசறைப் பட்டறையின் இரண்டாவது வெளியீடான 'தமிழினி'குறும்படம் முள்ளிவாய்க்கால் நினைவு நாளன்று வெளிவரவுள்ளது.அதன் தொடர்ச்சியாக நமது விடுதலைப் போராட்டத்தை எடுத்துச் சொல்லும் பல படைப்புக்களை வெளிக்கொணரும் முயற்சியில் நாம் நமது உறவுகளின் ஆதரவோடும் அனுசரணையோடும் பணியாற்றுவோம்.

No comments:

Post a Comment

Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no mat...